×

’49பி’ சட்டப்பிரிவின்படி சர்(க்)காரை கலைப்பது சாத்தியமா?

தீபாவளியன்று தடபுடலாக வெளியாகி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் சர்கார். முருகதாஸின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும், வில்லி கதாபாத்திரத்தில் வரலட்சுமி கோமளவள்ளி என்ற பெயருடன் கொடூரமான வில்லியாக நடித்திருப்பார். கோமளவள்ளி என்ற பெயர் தற்போது தமிழக அரசியலில், குறிப்பாக அதிமுக மற்றும் ஜெயலலிதா விசுவாசிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவள்ளி. இதனிடையே, சர்கார் திரைப்படத்துக்கு தமிழக அமைச்சர்கள் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.
 
’49பி’ சட்டப்பிரிவின்படி சர்(க்)காரை கலைப்பது சாத்தியமா?

தீபாவளியன்று தடபுடலாக வெளியாகி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் சர்கார்.

முருகதாஸின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும், வில்லி கதாபாத்திரத்தில் வரலட்சுமி கோமளவள்ளி என்ற பெயருடன் கொடூரமான வில்லியாக நடித்திருப்பார்.

’49பி’ சட்டப்பிரிவின்படி சர்(க்)காரை கலைப்பது சாத்தியமா?

கோமளவள்ளி என்ற பெயர் தற்போது தமிழக அரசியலில், குறிப்பாக அதிமுக மற்றும் ஜெயலலிதா விசுவாசிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவள்ளி. இதனிடையே, சர்கார் திரைப்படத்துக்கு தமிழக அமைச்சர்கள் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.

மேலும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், இப்படத்துக்கு தடைவிதிக்கலாமா என்று ஆலோசித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

’49பி’ சட்டப்பிரிவின்படி சர்(க்)காரை கலைப்பது சாத்தியமா?

அது ஒருபுறமிருக்க, இப்படத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 49பி குறித்து மக்களிடையே ஒரு புதுவித விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது எனலாம்.

பட கதைப்படி, “விஜயின் ஓட்டு கள்ள ஓட்டாக வேறொருவர் போட்டிருப்பார். அதற்காக தனது வாக்கை தானே செலுத்தவேண்டும் என நீதிமன்றத்தில் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்திருப்பார்.

’49பி’ சட்டப்பிரிவின்படி சர்(க்)காரை கலைப்பது சாத்தியமா?

அதேபோல், பல லட்சம் இளைஞர்களும் தங்கள் வாக்குகளும் கள்ள ஓட்டுகளாக இருப்பதாக கோரி வழக்கு தொடர்வர்.

அப்போது வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருக்கும்.”

இது நடைமுறைக்கு சாத்தியமா?

இதுபோன்ற சட்டப்பிரிவு உள்ளதா என சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்டபோது, பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “இந்திய தேர்தல் வரலாற்றில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. ஆனால், ‘49பி‘ சட்டப்பிரிவு இருக்கிறது.

தேர்தல் முறைகேடு நடந்தால், தேர்தலை தள்ளியோ, ஒத்தியோ வைக்கலாம். எடுத்துக்காட்டாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அரவக்குறிச்சி உள்பட 3 தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

ஒரு பூத்தில் ஒரு கள்ள ஓட்டு விழுந்தால், மக்கள் பிரதிநிதி தேர்ந்தெடுத்தது செல்லாது என்று எந்த சட்டப்பிரிவிலும் சொல்லப்படவில்லை.

ஆட்சி கலைப்பு என்பது அரசு சட்டத்தை மதிக்காமலும், நீதிமன்ற ஆணையை பின்பற்றாத பட்சத்திலும், 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி ஆட்சி கலைக்க வழிவகை உள்ளது.

ஆனால், இப்படத்தில் (சர்கார்) உள்ளது போல் ஆட்சி கலைப்பு என்பது சாத்தியமற்றது. இப்படத்திலும் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளது.

இப்படத்தில் ’49பி’ சட்டப்பிரிவு என்பதை அதீத கற்பனையால் பயன்படுத்தியுள்ளனர். இது அரசியலில் கால்பதிப்பதற்காக இதுபோன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

சட்டப்பிரிவு ’49பி’ என்ன சொல்கிறது?

எந்த ஒரு நபரின் வாக்காவது வேறு ஒரு நபரால் பதிவு செய்யப்பட்டுவிட்டால், ’49பி’ பிரிவின்கீழ், அசல் வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

ஆனால், வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமாக வாக்கை பதிவு செய்ய முடியாது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளதை போலவே, வாக்காளர் பெயர், சின்னம் ஆகியவற்றுடன் கூடிய காகிதம் தரப்படும்.

அதில் தான் விரும்புவோருக்கு எதிராக பெருக்கல் குறியிட்டு, அதை மடித்து எடுத்து, அதற்கு சம்மந்தப்பட்ட தலைமை அதிகாரியிடும் (presiding Office) கொடுத்துவிட வேண்டும்.

அந்த வாக்கும் வாக்கு எண்ணிக்கையின்போது, அஞ்சல் வாக்கு என்ற வகையில் சேர்த்துக்கொள்ளப்படும்.

ஒருவிதத்தில் பாராட்டுக்குரியது விஜயின் படங்கள்

49பி சட்டப்பிரிவு விவாதத்துக்குள்ளாக இருந்தாலும், அரசியல் சட்டங்கள் குறித்து மக்களிடையே தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதையும் புறந்தள்ளிவிட முடியாது.

மேலும், விஜயின் தமிழின் படத்திலும் அரசியல் சட்டங்கள் குறித்து பல தெளிவான அணுகுமுறைகள் கடைபிடிக்கப்பட்டிருந்ததால் அச்சமயம் அப்படம் மிகவும் பேசுபொருளாய் இருந்ததை நாம் அறிவோம்.

இதுபோன்ற படங்கள் வருவது நல்லதுதான் அதேசமயம் கற்பனைக்கு எட்டாத வகையில் சட்டத்தை இயக்குநர்கள் பயன்படுத்தவேண்டாம் என்று சட்டநிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதேபோல், சில ஆண்டுகளுக்கு முன்பு ‘49ஓ‘ சட்டப்பிரிவு வெளியாகி, மக்களிடையே பெரியளவில் சென்றடைந்தது. இதுவும் ஒருவிதத்தில் மகிழ்ச்சியே!

அடிப்படை சட்டங்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

From around the web

Trending Videos

Tamilnadu News