×

மாநில உரிமை நாளாக அறிவிக்க வேண்டும் - திருமாவளவன்... மிஸ் யூ அப்பா.. உருகும் குஷ்பு!!!

கலைஞர் இறந்த பின்னர் திமுக ஆட்சிக்கு வந்து கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்பதால் தொண்டர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
 
thirumavalavan-and-kushboo-jpg

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்தநாள் திமுக தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உள்ள நிலையில் தொண்டர்கள் வீடுகளில் இருந்தபடியே கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மரியாதை செய்து பிறந்தநாளை எளிமையாக கொண்டாட முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் ‘ஜீன் 3 மாநில உரிமை நாள்: பெரியார், அண்ணா பாசறையில் வளர்ந்தவர். மைய-மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்ய ஆணையம் நியமித்தவர். மாநில உரிமைகளுக்கு அடித்தளம் அமைத்தவர். கூட்டாட்சி கோட்பாட்டுக்கு உயிர்ப்பை அளித்தவர். தமிழக அரசே, கலைஞர் பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவிக்க வேண்டும் என் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி டுவிட்டரில் பல அரசியல் பிரபலங்கள் திரை உலக பிரபலங்கள் டுவிட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சற்று முன் திமுகவில் ஒரு சில வருடங்கள் இருந்த நடிகையும் தற்போதைய பாஜக பிரபலமுமான குஷ்பு தனது டுவிட்டரில் கருணாநிதி குறித்து ஒரு பதிவு செய்துள்ளார்

நான் ஒருநாள் கூட கருணாநிதியை உணராத நாளில்லை எனக்கு ஒரு குருவாக கடவுளுக்கு மேல் அவர் இருந்தார் என்றும், அவர் என்னுடைய மிகச் சிறந்த ஆசிரியராகவும் இருந்தார் என்றும், உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் என் மீது பொழியும் என்று நான் நம்புகிறேன் என்றும், மிஸ் யூ அப்பா என்றும் பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த நெட்டீசன்களோ..குஷ்பு அவர்களே முருகன் இதை பார்த்துக்கொண்டிருக்கிறார். காவெடி தூக்க ரெடியா இருங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News