×

தனித்தனியாக அறிக்கை வெளியிடும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் : அதிமுகவில் விரிசலா?...

 
admk

2011 மற்றும் 2016 இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று தமிழகத்தில் 10 வருடங்களாக அதிமுக ஆட்சி நடைபெற்றது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் அதிமுகவில் தலைமை இடத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் இடையேயும் எப்போதும் நிழல் யுத்தம் இருந்து வருகிறது.  எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா முதல்வராக அறிவிக்க, ஓபிஎஸ் தர்ம யுத்தத்தை துவங்கினார். பின்னார், பாஜகவின் சமரசத்தை ஏற்று எடப்பாடியுடன் இணைந்தார். 

ஆனால், அதன் பின்னரும் ஓ.பன்னீர் செல்வம் டம்மியாகவே ட்ரீட் செய்யப்பட்டார். கட்சி, ஆட்சி என இரண்டின் தலைமையாகவும் எடப்பாடி பழனிச்சாமி மாறினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது துவங்கி, தோல்விக்கு பின் யார் எதிர்கட்சி தலைவர் என்பது வரை பழனிச்சாமிக்கும்,பன்னீருக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. ஆனாலும், இறுதியில் பழனிச்சாமியே வெற்றி பெற்றார்.

admk

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் நிர்வாகிகள் பலரும் கூற துவங்கியுள்ளனர். அதிமுக ஆட்சியில் இருந்த போது பொஹ்டு பிரச்சனைகளில் ஓபிஎஸ்- இபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டு வந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக இ.பி.எஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியே அறிக்கை விட துவங்கியுள்ளனர்.

எதிர்கட்சி தலைவர் என்கிற முறையில் பழனிச்சாமி  தமிழகத்தின் தேவைகள் குறித்து கடிதம் அனுப்பினால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் தமிழக பிரச்சனைகளை முதலமைச்சருக்கு சுட்டிக்காடி பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

எனவே, அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்கிற கேள்வி பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News