×

அமைதிகாக்க வேண்டும்: தொண்டர்களுக்கு அழகிரி வேண்டுகோள்!

வரும் 5-ஆம் தேதி முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி தனது ஆதரவாளர்களுடன் அமைதிப்பேரணி நடத்த உள்ள முன்னாள் அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி இந்த பேரணியை யாருக்கும் இடையூறு இல்லாமல் அமைதியாக நடத்த தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார். கலைஞரின் உண்மையான தொண்டர்கள் என்பக்கம் தான் உள்ளார்கள், எனது பலத்தை விரைவில் நிரூபிப்பேன் என கூறிவந்த மு.க.அழகிரி செப்டம்பர் 5-ஆம் தேதி கலைஞர் சமாதி நோக்கி ஒரு லட்சம் பேருடன் பேரணி செல்ல உள்ளதாக கூறியிருந்தார்.
 
அமைதிகாக்க வேண்டும்: தொண்டர்களுக்கு அழகிரி வேண்டுகோள்!

வரும் 5-ஆம் தேதி முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி தனது ஆதரவாளர்களுடன் அமைதிப்பேரணி நடத்த உள்ள முன்னாள் அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி இந்த பேரணியை யாருக்கும் இடையூறு இல்லாமல் அமைதியாக நடத்த தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.

கலைஞரின் உண்மையான தொண்டர்கள் என்பக்கம் தான் உள்ளார்கள், எனது பலத்தை விரைவில் நிரூபிப்பேன் என கூறிவந்த மு.க.அழகிரி செப்டம்பர் 5-ஆம் தேதி கலைஞர் சமாதி நோக்கி ஒரு லட்சம் பேருடன் பேரணி செல்ல உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் இந்த பேரணி குறித்து அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார் அழகிரி.

அதில், கலைஞரின் 30-ஆம் நினைவு நாளை முன்னிட்டு தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று செப்டம்பர் 5-ஆம் தேதி அண்ணா சிலை அருகில் உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருந்து கலைஞர் நினைவிடம் வரை பேரணி சென்று அஞ்சலி செலுத்தவுள்ளோம். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரவுள்ள கலைஞரின் உடன்பிறப்புகள், சரியாக 10 மணியளவில் அண்ணா சிலை அருகே வர வேண்டும்.

இந்த பேரணியின்போது எந்தவித ஆரவார ஆர்ப்பாட்டமின்றி, பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பேருந்துகள் மற்றும் வாகனங்கள் பேரணியில் பங்கேற்க உள்ள நிலையில், கவனமாகப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் அழகிரி.

From around the web

Trending Videos

Tamilnadu News