×

பதவியில இருந்தா போதும்.. அதிகாரம் இருக்கும் வரை அனுபவியங்கள் – முதல்வரை விளாசிய நடிகர் சித்தார்த்

தேசிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு சமர்பித்த மசோதாவுக்கு அதிமுக அரசு ஆதரவு தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்க தேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக இந்தியாவிற்கு வரும் முஸ்லீம் அல்லாத மக்கள் இந்திய குடியுரிமையை பெற முடியும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் பாஜக இந்த
 
பதவியில இருந்தா போதும்.. அதிகாரம் இருக்கும் வரை அனுபவியங்கள் – முதல்வரை விளாசிய நடிகர் சித்தார்த்

தேசிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு சமர்பித்த மசோதாவுக்கு அதிமுக அரசு ஆதரவு தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்க தேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக இந்தியாவிற்கு வரும் முஸ்லீம் அல்லாத மக்கள் இந்திய குடியுரிமையை பெற முடியும்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் பாஜக இந்த மசோதாவை இன்று நிறைவேற்றிவிட்டது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதற்கு எதிராக வாக்களித்த நிலையில், இந்த மசோதாவிற்கு அதிமுகவும் ஆதரவு தெரிவித்தது.

இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டிற்கு முதல்வராக இருப்பது வெட்கக்கேடானது. என்ன ஆனாலும் தான் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நீங்களே எல்லாவற்றுக்கும் பொறுப்பு. அதுவரை பதவியை அனுபவியுங்கள்’ என தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவர் கண்டிப்பாக இந்த மசோதாவை ஆதரித்திருக்க மாட்டார். அவர் இல்லை அதுதான் பிரச்சனை’ என பதிவிட்டுள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News