×

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் : 5 திட்டத்தை துவங்கி வைத்த ஸ்டாலின்

 
stalin

இன்று மறைந்த முதல்வர் மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளாகும் .எனவே, நாடெங்கும் திமுகவினர் வீட்டிலேயே உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் 5 நலத்திடங்களை ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

கொரோனா நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்ட ரூ.4 ஆயிரத்தின் 2ம் தவணை ரூ.;2 ஆயிரத்தை வழங்குதல்..

தமிழக மக்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவியாக 14 வகையான மளிகை பொருட்களை வழங்குதல்..

திருக்கோவில்களில் சம்பளமின்றி பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு ரூ. 4 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி மற்றும் 13 வகை மளிகை பொருட்கள் வழங்குதல்...

கொரோனாவால் மரணமடைந்த பத்திரிக்கையாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் மற்றும் மருத்துவர், மருத்துவ பணியாலர், காவலர் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் வழங்குதல்...

உங்கள் தொகுதில் முதலமைச்சர் திட்ட பயனாளிகள் 10 பேருக்கு அரசு பயன்களை வழங்குதல்..

From around the web

Trending Videos

Tamilnadu News