×

விட்டதைப் பிடிக்க நினைக்கும் தேமுதிக … அதிர்ச்சியான அதிமுக – நிலைக்குமா கூட்டணி !

மக்களவைத் தேர்தலில் எந்த கூட்டணியில் இடம்பெறுவது என்ற குழப்பத்தில் இருந்த தேமுதிக கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு வந்தது. இதனால் அழுத்தம் கொடுத்து சீட்களை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அதிமுக கொடுத்த 3 சீட்களைப் பெற்றுக்கொண்டது. தங்களை விட பலம் கம்மியான பாமகவை விட கம்மியான சீட்களை வாங்கி பணிந்துபோனது அந்த கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது கட்சி பொதுக்கூட்டங்களில் வெளிப்படையாகத் தெரிந்தது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதுபோல ஏமாறக்கூடாது என்பதற்காக இப்போதே
 
விட்டதைப் பிடிக்க நினைக்கும் தேமுதிக … அதிர்ச்சியான அதிமுக – நிலைக்குமா கூட்டணி !

மக்களவைத் தேர்தலில் எந்த கூட்டணியில் இடம்பெறுவது என்ற குழப்பத்தில் இருந்த தேமுதிக கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு வந்தது. இதனால் அழுத்தம் கொடுத்து சீட்களை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அதிமுக கொடுத்த 3 சீட்களைப் பெற்றுக்கொண்டது. தங்களை விட பலம் கம்மியான பாமகவை விட கம்மியான சீட்களை வாங்கி பணிந்துபோனது அந்த கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது கட்சி பொதுக்கூட்டங்களில் வெளிப்படையாகத் தெரிந்தது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதுபோல ஏமாறக்கூடாது என்பதற்காக இப்போதே தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை நியமித்துள்ளது. இந்த குழு மொத்த இடங்களில் 25 இடங்களைக் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதைக்கேட்டு அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேமுதிகவுக்கு கால்பங்கு சீட்களைக் கொடுத்துவிட்டால் மற்ற கட்சிகளுக்கு என்ன கொடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் இதுபற்றி கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் முடிவெடுப்பார் என சொல்லி பேச்சுவார்த்தையை தள்ளி வைத்துள்ளனர். அவர்கள் சார்பில் 10 சதவீத இடத்துக்கு மேல் கொடுக்கலாம் என்ற முடிவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இருதரப்பின் எதிர்பார்ப்புகளும் மிகப்பெரிய இடைவெளியில் இருப்பதால் உள்ளாட்சித் தேர்தலில் இந்த கூட்டணி நிலைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News