×

முதல்வர்,ஆளுநர் ஆகியோர் தார்மீக ரீதியாக ராஜிநாமா செய்யவேண்டும்- முத்தரசன்

முதல்வர் மற்றும் ஆளுநர் ஆகியோர் தார்மீக ரீதியாக ராஜிநாமா செய்யவேண்டுமென்றும்., பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமின் வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கரூரில் பேட்டி அளித்தார் கரூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர் .முத்தரசன் கலந்துகொண்டு, முன்னாள் மறைந்த கரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.கே.பெரியசாமி திருஉருவ படத்தை திறந்துவைத்தார். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர் முத்தரசன் செய்தியாளர்களை
 
முதல்வர்,ஆளுநர் ஆகியோர் தார்மீக ரீதியாக ராஜிநாமா செய்யவேண்டும்- முத்தரசன்

முதல்வர் மற்றும் ஆளுநர் ஆகியோர் தார்மீக ரீதியாக ராஜிநாமா செய்யவேண்டுமென்றும்., பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமின் வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கரூரில் பேட்டி அளித்தார்

கரூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர் .முத்தரசன் கலந்துகொண்டு, முன்னாள் மறைந்த கரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.கே.பெரியசாமி திருஉருவ படத்தை திறந்துவைத்தார். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது சி.பி.ஐ விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, முதல்வர் ராஜிநாமா செய்து ஒரு நல்ல முன்னுதாரனத்தினை ஏற்படுத்திட வேண்டுமென்றும், அப்போது தான் பொதுவாழ்வில் இருப்பவர்கள் இது போன்று செய்தால் தான் நல்லது என்றதோடு, மாநில ஆட்சியில் எங்கு எங்கெல்லாம், பா.ஜ.க இல்லையோ, அங்கெல்லாம், கவர்னர்களின் தலையீடு உள்ளது என்றும், தமிழகத்தில் ஆங்காங்கே ஆளுநர் ஆய்வு என்று நடத்தி அதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கங்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அதே நேரத்தில் நிர்மலா தேவி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கவர்னர் பெயர் வருகின்றதாகவும், ஆகவே, ஆளுநரே, ராஜிநாமா செய்யவேண்டுமென்றும், இல்லையேல் குடியரசுத்தலைவர் அவரை (ஆளுநர்) திரும்ப பெற வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.

சி.ஆனந்தகுமார்

From around the web

Trending Videos

Tamilnadu News