×

நடிகர்கள் வருவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை – திருமாவளவன் ஓபன் டாக் !

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்களுக்கான வெற்றிடம் இன்னும் அப்படியேதான் உள்ளது என ரஜினி பேசியது விவாதத்துக்குள்ளானது. அதையடுத்து ரஜினி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட அவர் ஒரு நடிகர். அவர் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
 
நடிகர்கள் வருவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை – திருமாவளவன் ஓபன் டாக் !

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்களுக்கான வெற்றிடம் இன்னும் அப்படியேதான் உள்ளது என ரஜினி பேசியது விவாதத்துக்குள்ளானது. அதையடுத்து ரஜினி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட அவர் ஒரு நடிகர். அவர் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமா வளவனிடம் கேட்கப்பட்ட போது ‘இப்போது மக்களின் பார்வை மாறி இருக்கிறது. நடிகர்களை நடிகர்களாகவே பார்க்கிறார்கள். மக்களிடம் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய தாக்கத்தை மற்றவர்கள் ஏற்படுத்த முடியாது. ஆனால், வயது மூப்பின் அடிப்படையில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News