×

காவலர் மனைவிக்கே ராங் கால் – நடவடிக்கை எடுக்காததால் வெளியிட்ட வீடியோ !

கோயம்பேடு பகுதியில் காவலராக பணியாற்றி வரும் காவலர் கார்த்தி என்பவர் தான் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் வீடியோ வெளியிட்டு புலம்பியுள்ளார். கோயம்பேடு சரகத்தில் போக்குவரத்துக் காவலராக பணிபுரிபவர் கார்த்திக். கடந்த சில வாரங்களாக இவரது மனைவியின் செல்போனுக்கு தவறான அழைப்புகள் வந்த வண்ணம் இருந்துள்ளன. இது சமமந்தமாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் கார்த்தி தனது மனைவியை
 
காவலர் மனைவிக்கே ராங் கால் – நடவடிக்கை எடுக்காததால் வெளியிட்ட வீடியோ !

கோயம்பேடு பகுதியில் காவலராக பணியாற்றி வரும் காவலர் கார்த்தி என்பவர் தான் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் வீடியோ வெளியிட்டு புலம்பியுள்ளார்.

கோயம்பேடு சரகத்தில் போக்குவரத்துக் காவலராக பணிபுரிபவர் கார்த்திக். கடந்த சில வாரங்களாக இவரது மனைவியின் செல்போனுக்கு தவறான அழைப்புகள் வந்த வண்ணம் இருந்துள்ளன. இது சமமந்தமாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் காவல்துறையினர் அந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் கார்த்தி தனது மனைவியை சந்தேகப்படுவதாகக் கூறி அவர் மேல் வழக்குப் பதிவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த கார்த்திக் இந்த சம்பவத்தை ஒரு வீடியோவாகப் பதிவு செய்து சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. காவலர் ஒருவர் கொடுத்த புகாருக்கே சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்களுக்குப் போலிஸார் மேல் எப்படி நம்பிக்கை வரும் என்ற கேள்வியே எஞ்சி நிற்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News