×

யாஸ் புயல்:  உள்வாங்கிய இராமேஸ்வரம் கடல் 

வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில்  நேற்றும் பலத்த காற்றும் கடல் சீற்றமும் ஏற்பட்டது

 
rameswaram

வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில்  நேற்றும் பலத்த காற்றும் கடல் சீற்றமும் ஏற்பட்டது.

வங்கக் கடலில் தற்ற்போது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. இது புயலாக மாறியதை அடுத்து அதற்கு யாஸ் என்று பெயரிடப்பட்டது. இந்த புயலால் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதில் ராமேஸ்வரம் பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இதே போல் தனுஷ்கோடி பகுதியிலும் கடல் சீற்றமாக காணப்படுகி|றது. குறிப்பாக, அரிச்சல்முனை பகுதியில் கடற்கரையில் உள்ள தடுப்பு சுவரையும் தாண்டி சாலை வரையிலும் கடல்நீர் வந்தது. எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் மோதி கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக எழுந்தன.

குறிப்பாக, ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில் நேற்று காலை 7 மணியில் இருந்தே சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. 
வழக்கமாக இதுபோன்ற சீசனில் கடல் உள்வாங்கினாலும் பகல் 11 மணிக்கு பிறகு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புவது வழக்கம். ஆனால் நேற்று மாலை வரையிலும் கடல் உள்வாங்கிய நிலையிலேயே காணப்பட்டது. பின்னரே அது இயல்பு நிலைக்கு வந்த்து. கடல் உள்வாங்கியதால் பல படகுகள் தரை தட்டி நின்றன.
 

From around the web

Trending Videos

Tamilnadu News