அந்த கொம்பு வச்ச சிங்கத்த கொஞ்சம் இறக்கிவிடுங்கய்யா.! சசிகுமார் ரசிகர்கள் குமுறல்.!

by Manikandan |
அந்த கொம்பு வச்ச சிங்கத்த கொஞ்சம் இறக்கிவிடுங்கய்யா.! சசிகுமார் ரசிகர்கள் குமுறல்.!
X

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் சசிகுமார் அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தற்போது வெளியாக உள்ளது. இந்த படத்தை எஸ்ஆர் பிரபாகரன் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சமுத்திரகனி, அருண்விஜய் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் அவர்கள் நடித்துள்ளார். இரண்டு வருடங்களாக தயாரிக்கப்பட்டு வந்த இந்த படம் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பிய படம் வெளியிடப்படாமல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வருகின்ற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி அன்று இந்த படம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பல தடவை ரிலீஸ் தேதி அறிவித்து பின்வாங்கிய இந்தப் படம், இந்த முறையாவது ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Next Story