பொங்கல் ரேஸிலிருந்து வெளியேறிய 3 படங்கள்! உள்ளே வந்த 2 படங்கள்.. பரபர அப்டேட்...

by Rohini |
surya
X

surya

Pongal Release: சினிமாவை பொறுத்தவரைக்கும் ரசிகர்களை எப்படியாவது தன் கட்டுக்குள் கொண்டு வர என்னெல்லாம் யுக்திகளை கையாள வேண்டுமே அதற்கான முயற்சிகளில் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இறங்குவார்கள்.

அதில் ஒன்றுதான் பெரிய பண்டிகைகளின் போது பெரிய பெரிய நடிகர்களின் படங்களை திரைக்கு கொண்டு வந்து ரசிகர்களை இழுப்பது. பொதுவாக சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள்தான் தீபாவளி, பொங்கல் என பெரிய பண்டிகைகளின் போது ரிலீஸ் ஆகும். அப்பொழுதுதான் ரசிகர்கள் விடுமுறை தினமாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக ஒட்டுமொத்த குடும்பங்களையும் அழைத்து வந்து படம் பார்க்க வருவார்கள்.

இதையும் படிங்க: அப்பவே இதை செய்த அஜித்!.. இப்போதான் விஜய்க்கு ஞானம் பொறந்திருக்கா?.. இனிமே வெளியவே வரமாட்டாரா?..

இந்தப் பக்கம் தயாரிப்பாளர்களின் கல்லாவும் நிறைய ஆரம்பிக்கும்.அந்த வகையில் பொங்கல் பண்டிகையில் மூன்று பெரிய படங்கள் வருவதாக இருந்தது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படம், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்2 படம், சிறுத்தை சிவா இயக்கதில் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம்.

இந்தப் படங்கள் எல்லாம் பொங்கலுக்கு ரிலீஸ் என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள். ஆனால் இதில் எந்தப் படமும் பொங்கல் ரிலீஸ் இல்லையாம். ஏதோ காரணத்திற்காக படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: மகள் இறந்த துக்கத்திலேயே ரத்தம் புரமோஷனில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி!.. என்ன பேசினார் தெரியுமா?..

ஆனால் யாரும் எதிர்பார்க்காத இரண்டு திரைப்படங்கள் தான் பொங்கல் ரிலீஸ் என்று சொல்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம், பாலா- அருண்விஜய் கூட்டணியில் தயாராகி கொண்டிருக்கும் வணங்கான் திரைப்படம். இவை இரண்டும்தான் பொங்கல் ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது.

பண்டிகை காலங்களில் வெளியாகும் படங்களின் நிலைமை ஒரு ரேஸ் போலத்தான். ஜெயிப்பதும் தோற்பதும் அவரவர் அதிர்ஷ்டத்தை பொறுத்தது. இதே ஒரு எண்ணத்தில் தான் கல்லாவை கட்டுவதற்காக விஜயின் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதியை லாக் செய்தது.

இதையும் படிங்க: தள்ளிப்போகும் தளபதி 68 ஷூட்டிங்!.. பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்!.. அட போங்கப்பா!..

19லிருந்து 23 வரை பூஜை விடுமுறையாக இருப்பதால் கிட்டத்தட்ட 500 கோடியை அந்த இடைப்பட்ட காலத்தில் அள்ளிவிடும் என்று சொல்கிறார்கள்.

Next Story