Connect with us

Cinema History

ஒரு லட்ச ரூபாய்க்கு ஒர்த்தா நீ!.. கேள்வி கேட்ட சிரஞ்சீவியை மிரள வைத்த பொன்னம்பலம்…

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வந்த வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் பொன்னம்பலம். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மேனாகதான் அறிமுகமானார் பொன்னம்பலம்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு அவர் ஸ்போர்ட்ஸில் அதிக ஆர்வத்துடன் இருந்தார். அதனால் இயற்கையாகவே அவரது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருந்தது. இதனால் சினிமாவில் ஸ்டண்ட் மேனாக இருப்பது அவருக்கு அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. அவர் சினிமாவில் இருந்த சமகாலத்தில் அவருக்கு நிகராக இன்னொரு ஸ்டேட்மெண்ட் இல்லாத அளவுக்கு பிரமாதமாக சண்டை காட்சிகளில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் அவருக்கு நடந்த சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். பொன்னம்பலத்திற்கு திருமணமாக இருந்த சமயத்தில் அவருக்கு திருமணத்திற்கு 3 லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டது. அவர் 2 லட்ச ரூபாய் வரை சேர்த்து இருந்தார்.

பொன்னம்பலம் கேட்ட சம்பளம்:

அந்த சமயத்தில் சிரஞ்சீவி படத்தில் சண்டை காட்சிக்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது நேரடியாக பொன்னம்பலம் எனக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக கொடுத்தால்தான் அந்த படத்தில் நடிப்பேன் என கூறியுள்ளார். அப்போதைய காலகட்டத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கே அவ்வளவு சம்பளம் தருவதில்லை.

எனவே இது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்துள்ளது இந்த செய்தி சிரஞ்சீவிக்கும் சென்றுள்ளது. ஒரு லட்ச ரூபாய் கேட்கிறார் என்றால் அந்த அளவிற்கு அவரிடம் என்ன திறன் உள்ளது என பார்க்கலாம். எனவே அவரை அழைத்து வாருங்கள் என்று கூறியுள்ளார் சிரஞ்சீவி.

ponnambalam 2

ponnambalam 2

இவர்களும் பொன்னம்பலத்திடம் சென்று உனது சண்டை காட்சி முதலில் நன்றாக இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு பொன்னம்பலம் எனது சண்டை காட்சிகள் நன்றாக இருந்தால் மட்டும் எனக்கு சம்பளம் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளார்.

பிறகு அவரது சண்டை காட்சிகளை பார்த்த சிரஞ்சீவி மிரண்டு போய் உள்ளார் மிகவும் திறமையான ஆள்தான் இவர் கேட்ட சம்பளத்தை கொடுங்கள் என ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தை வாங்கி கொடுத்துள்ளார் சிரஞ்சீவி. அதனை பொன்னம்பலம் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்’ பாட்டு உருவானபோது நடந்த களோபரம்… எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?…

google news
Continue Reading

More in Cinema History

To Top