மணிரத்தினத்தின் மாஸ்டர் பீஸ்!.. பாகுபலி 2-ஐ விட மாஸ்!… பொன்னியின் செல்வன் 2 டிவிட்டர் விமர்சனம்….
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கிய திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், பொன்னியின் செல்வனாக அதாவது அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர்.
இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகி உலகமெங்கும் உள்ள ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. நல்ல வசூலையும் இப்படம் பெற்றது. இப்படத்தை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று காலை உலகமெங்கும் வெளியானது. இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் டிவிட்டரில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
‘முதல் 15 நிமிடங்கள் தீயா இருக்கு. கரிகாலனாக விக்ரம் அசத்தியிருக்கிறார். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
ஐஸ்வர்யாராயும், விக்ரமும் ஒரு காட்சியில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர். அந்த காட்சியின் படத்தின் ஹைலைட். பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு பெரிய சர்ப்பரைஸ் இருக்கிறது என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இது மணிரத்தினத்தின் மாஸ்டர் பீஸ்.. கதை, கதாபாத்திரங்கள், விஸ்வல், வசனம் மற்றும் இசை என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோர் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் நாவலிருந்து சில காட்சிகளை மாற்றியிருந்தாலும் மணிரத்தினம் அதை நியாயமாக செய்துள்ளார். திரைக்கதை கொஞ்சம் மெதுவாக சென்றாலும் படம் போரடிக்காமல் செல்கிறது. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.