என்னால கிளைமேக்ஸ்லாம் நடிக்க முடியாது... தெறித்து ஓடிய பொன்னியின் செல்வன் பிரபலம்.. எந்த படத்தில் தெரியுமா?
திரைப்படங்களில் நாம் பார்க்கும் காட்சிகள் எல்லாம் அருமையாக வந்தால் கூட அதை நடிக்கும் போது அந்த காட்சியில் இருக்கும் நடிகர்கள் ரொம்பவே கஷ்டத்தினை தான் அனுபவிப்பார்கள். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்த படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரமுடன் லால் மற்றும் விக்ரம் பிரபு இணைந்து நடித்திருந்தனர். அப்போது ஷூட்டிங் ஐதராபாத்தில் ரொம்ப வெப்பமான இடத்தில் தான் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததாம். ஆனால் அங்கு கூட நடித்துக்கொடுத்த லால் ஒரு படத்தில் இருந்து என்னால் நடிக்கவே முடியாது என ஓட்டமே பிடித்துவிட்டாராம்.
விக்ரம் பிரபு மற்றும் லால் இணைந்து நடித்த படம் டாணாக்காரன். தமிழ் இயக்கத்தில் காவல்துறை பயிற்சி பள்ளியில் அவருக்கு நேர்ந்த அனுபவத்தை அப்படியே சொல்லி இருந்தார். இது பலர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் கடுமையான போலீஸ் அதிகாரியான ஈஸ்வர மூர்த்தியாக லால் நடித்திருந்தார்.
இப்படத்தின் ஷூட்டிங் வேலூர் வெயிலில் தொடர்ச்சியாக 52 நாள் நடந்ததாம். கடைசி நாள் ஷூட்டிங்கில் என்னால் எல்லாம் நடிக்க வர முடியாது. என்ன வெயில் முடியல என லால் அந்த இடத்தினை விட்டு கிளம்பிவிட்டாராம். இதை விக்ரம் பிரபு சமீபத்தியில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.