More
Categories: Cinema News latest news

விக்ரமை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன்…அட இத்தனை கோடி வசூலா?!…

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், திரிஷா என பலரும் நடித்துள்ளனர்.

Advertising
Advertising

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக இந்த படம் பற்றியே சமூகவலைத்தளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வந்தது. எனவே, இப்படம் மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு பட ரிலீஸுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே இப்படத்திற்காக முன்பதிவு துவங்கப்பட்டது. தமிழகத்திலும் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்தனர்.

இதன் விளைவாக இப்படத்தின் வசூல் தாறுமாறாக எகிறி வருகிறது. தமிழகத்தில் ஒரே நாளில் இப்படம் ரூ.26.5 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

kamal in vikram

கமல் நடிப்பில் வெளியாகி வசூலில் சக்கை போடுபோட்ட விக்ரம் திரைப்படம் கூட முதல் நாளில் ரூ.20 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் சேர்த்தால் பொன்னியின் செல்வன் படத்தின் முதல்நாள் ரூ.84.42 கோடிகளை இப்படம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts