அந்த ரெண்டு நடிகரால படாத பாடுபட்ட மணிரத்னம்...யாருன்னு தெரியுமா?....
பல வருடமாக தமிழ் திரையுலகமே ஆசைப்பட்ட படம் தான் பொன்னியின் செல்வன். பல இயக்குனர்கள், நடிகர்கள் பணியாற்ற வேண்டும் என நினைத்த படத்தினை மணிரத்னம் முடித்து விட்டார். முதல் பாகம் வெளியாகி சக்கை வசூல் செய்து இருக்கிறது. இரண்டாம் பாகம் சில மாதங்களில் ரிலீஸுக்கு தயாராகி கொண்டு இருக்கிறது.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியதேவனாக கார்த்தி, பூங்குழலியாக ஐஸ்வர்யா, குந்தவையாக த்ரிஷா, பழுவேட்டரையர் சகோதர்களாக சரத்குமார் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இதில் பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையராக நடித்த பார்த்திபன் மற்றும் சரத்குமார் ரொம்ப தூய தமிழில் பேசினார்களாம். மணிரத்னமோ இவ்வளோலாம் வேணாம். கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள் என்றாராம். சரி இப்படி நடிக்கணுமா? இதை இப்படி செய்யவா எனக் கேட்க மணிரத்னம் இவர்கள் தொடர் கேள்விகளால் நொந்தே போனாராம். ஒரு கட்டத்தில் ரொம்ப தமிழ் தெரிந்த இவங்க ரெண்டு பேரும் தான் தொல்லை என கலாய்த்தே விட்டாராம்.