Connect with us

tamil movie reviews

தமிழ்சினிமாவின் 60 வருடக்கனவு… பலித்ததா? இல்லையா?.. “பொன்னியின் செல்வன்” திரை விமர்சனம்

இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ்சினிமாவின் 60 வருட கனவாக இருந்த “பொன்னியின் செல்வன்” ரசிகர்களுக்கு விருந்தாக இருந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதை

சம்புவராயன் மாளிகையில் சோழ தேசத்துக்கு எதிராக சதி நடப்பதாக காஞ்சிபுரத்தில் இருக்கும் இளவரசன் ஆதித்த கரிகாலனுக்கு (விக்ரம்) உளவுச்செய்தி வருகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்டறிந்து சகோதரி குந்தவையிடம் (த்ரிஷா) கூறுமாறு ஆதித்த கரிகாலன் வந்தியதேவனை (கார்த்தி) அனுப்புகிறார். சம்புவராயர் மாளிகையில் நடப்பதை குந்தவையிடம் சென்று கூறுகிறார்.

சோழ நாட்டிற்கு எதிரான சதியை முறியடிக்க தனது சகோதரரான அருண்மொழிவர்மனை (ஜெயம் ரவி) பழையாறைக்கு அழைத்துவருமாறு வந்தியதேவனிடம் கூறுகிறார் குந்தவை. வந்தியதேவன் இலங்கையில் இருக்கும் அருண்மொழிவர்மனை அழைக்கச் செல்கிறார். அங்கே பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஆபத்துதவிகளிடம் அருண்மொழியும் வந்தியத்தேவனும் சிக்கிக்கொள்கிறார்கள்.

அதில் வந்தியத்தேவனை கப்பலில் கடத்திவிடுகிறார்கள். வந்தியதேவனை மீட்க அருண்மொழி வர்மன் கப்பலுக்குள் சென்று சண்டையிடுகிறார். கப்பல் கடலில் முங்கிவிடுகிறது. இளவரசன் அருண்மொழிவர்மன் இறந்துவிடுகிறார் என செய்திவருகிறது. அவர் நிஜமாகவே இறந்தாரா இல்லையா? சோழ நாடு சதியில் இருந்து காப்பாற்றப்பட்டதா? என்பதே இரண்டாம் பாகம்.

பிளஸ்கள்

60 வருடமாக தமிழ்சினிமா ஜம்பவான்கள் முயற்சி செய்து கைவிட்ட கதையை சாத்தியமாக்கிய மணிரத்னத்தை நிச்சயமாக பாராட்டலாம். நாவலை திரைப்படமாக சுருக்குவதில் உள்ள சவாலை மிகவும் நேர்த்தியாகவே கையாண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

படத்தின் உயிர்நாதமே ரவி வர்மனின் ஒளிப்பதிவுதான். 10 ஆம் நூற்றாண்டு தமிழகத்தை கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் தோட்டதரணி. அந்த வரலாற்று உணர்வை சிறப்பாக நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். சண்டைக் காட்சிகளில் கேமரா புகுந்து விளையாடுகிறது. சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஜெயமோகனின் வசனங்கள் பளீச். ஏ ஆர் ரஹ்மானின் இசை படத்தின் ஓட்டத்திற்கு சிறப்பாகவே அமைந்திருக்கிறது.

மைனஸ்கள்

என்னதான் தமிழ்சினிமாவின் கனவுப்படைப்பாக இருந்தாலும் திரைக்கதையில் சற்று சொதப்பியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். “வரலாற்றுப்படம் என்றால் விறுவிறுப்பாக இருக்கவேண்டாமா? இது என்ன இப்படி மெதுவாக நகர்கிறதே” என ரசிகர்களை ஒரு கட்டத்தில் உச் கொட்ட வைத்துவிடுகிறது. படத்தில் அதிகமான கதாப்பாத்திரங்கள் வருவதால் அக்கதாப்பாத்திரங்கள்  ரசிகர்கள் மனதில் பதிய கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்கிறது.

மொத்தத்தில் 5 பாகங்கள் உள்ள நாவலை சுருக்கி அதனை நேர்த்தியாகவும் படமாக்கிய மணிரத்னம் பாராட்டுக்குரியவர் என்றாலும், திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக அமைத்திருக்கலாம். எனினும் தமிழின் முக்கிய படைப்பாக இத்திரைப்படம் திகழும் என்பதில் சந்தேகமே இல்லை.

google news
Continue Reading

More in tamil movie reviews

To Top