ps -2விலிருந்து தூக்கப்பட்ட கதாபாத்திரம்!..அப்போ வந்தியத்தேவனுடைய நிலைமை?..

by Rohini |
ps_main_cine
X

தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் அமைந்தது. கிட்டத்தட்ட 400 கோடிக்கும் மேலாக வசூலை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் , திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்றோர்களின் நடிப்பில் படம் மாபெரும் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

ps1_cine

நாவலர் கல்கியின் பழமையான நாவலான பொன்னியின் செல்வன் கதையை கிட்டத்தட்ட மூன்று தலைமுறை நடிகர்களால் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் இப்போது மணிரத்னம் அதை செய்து காட்டியுள்ளார். ஏராளமான கதாபாத்திரங்களோடு நகரும் இந்த கதையில் அழகான நட்சத்திரங்களை தேர்வு செய்து அதன் மூலம் மக்களிடையே ஒரு வியப்பை ஏற்படுத்தியுள்ளார் மணிரத்னம்.

இதையும் படிங்க : மூன்று முடிச்சு படத்தில் ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? ஆனா, கமல்,ஸ்ரீதேவிக்கு தான் அதிகமாம்…

ps2_cine

முதல் பாகம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்க முக்கிய கதாபாத்திரமான மணிமேகலையை இந்த இரண்டாம் பாகத்திலாவது காட்டுவாரா மணிரத்னம் ? என்று நாவலை படித்த ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகிறார்கள்.

ps3_cine

மொத்தம் 5 பாகங்களை கொண்ட பொன்னியில் செல்வனில் 5வது பாகத்தில் தான் இந்த மணிமேகலை கதாபாத்திரம் தென்படும். அதுவும் வந்தியத்தேவனை ஒரு தலையாக காதலிக்கும் ஒரு வீரியமிக்க மிக்க ரசிகர்களால் மறக்கமுடியாத கதாபாத்திரமாக இந்த மணிமேகலை இருப்பாள். இது ஒரு முக்கியமான கதாபாத்திரம். இதை பற்றி சித்ரா லட்சுமணன் கூறும்போது முதல் பாகத்தில் தோன்றிய கதாபாத்திரங்களை வைத்து தான் இரண்டாம் பாகமும் நகரும். ஆகவே மணிமேகலையை காட்டுவது என்பது சாத்தியமில்லை என்று கூறினாள்.

Next Story