இதுவரை இல்லாத பிரமாண்டம்… மிரள வைக்கும் காட்சிகள்… மிரட்டிய பொன்னியின் செல்வன்…

Published on: July 8, 2022
---Advertisement---

மணிரத்னத்தின் பிரம்மாண்ட கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுக்க 5 மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து பிரமாண்டமாக தயாரித்த இந்த வரலாறு படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மிகவும் அதிகமகா உள்ளது.

இந்த படம் வெளிவதற்கு முன் படக்குழு இப்படத்தில் நடித்துள்ள முக்கிய கத்பாத்திரத்திரங்களின் கேரக்டர் போஸ்டர்களை வெளியிட்டு ப்ரோமஷன் பணியை முடிக்கிவிட்டுள்ளது. தற்போது, இப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்களேன் –விஜயின் மெகா ஹிட் படத்தை ‘ஜஸ்ட் மிஸ்’ தவறவிட்ட அஜித்… 18 வருட ரகசிய தகவல் இதோ…

அதில் ஒவ்வொரு காட்சியும் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட காட்சியமைப்பும், அதற்கு இசைப்புயலின் பிரமிக்க வைக்கும் இசையும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.இதனை பார்க்கும் போதே படம் எப்போது ரிலீஸ் ஆகுமோ இந்த தமிழ் மன்னனின் பிரமாண்டத்தை எப்போது பார்ப்போமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.