பொன்னியின் செல்வன் படத்தில் இருக்கும் ட்விஸ்ட்...! அந்த நடிகரின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி....
மணிரத்னம் இயக்கத்தில் 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்க காத்துக் கொண்டிருக்கும் படம் பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்த படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், சரத்குமார் உட்பட பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஏஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் டீஸர், ஆடியோ எல்லாம் வெளிவந்த நிலையில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. கதையின் படி நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதால் எப்படி முழு படமாக தரப்போகிறார் என்ற பயம் இருந்த நிலையில்
இதையும் படிங்கள் : அட இது செம மாஸ்!..அதே மூணு எழுத்து செண்டிமெண்ட்!..அஜித் 61 பட தலைப்பு இதுதானாம்…
பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்து படத்தின் முதல் பாகம் தான் 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. மேலும் அதிலும் அத்தனை கதாபாத்திரங்களையும் காட்டி விடுவார்களா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சந்தேகத்தை போக்கும் விதமாக படத்தில் இரண்டாம் பாகத்தில் இருந்து தான் கதையின் நாயகன் ஜெயம் ரவியை தொடர இருக்கிறார்களாம். அதாவது முதல் பாகத்தில் அவரை பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுத்து முழு பாத்திரத்தையும் இரண்டாம் பாகத்தில் தான் காட்ட போகிறார்களாம். ஆகவே ஜெயம் ரவியை முதல் பாகத்தில் பார்ப்பது என்பது அறிது என கோடம்பாக்கத்தில் கூறி வருகின்றனர்.