More
Categories: Cinema History Cinema News latest news

சக்கை போடு போட்டு வரும் பொன்னியின் செல்வன் படத்திற்கான கதை இதுதான்…!

பொன்னியின் செல்வன் நாவலை அமரர் கல்கி எழுதினார். இந்த நாவல் 5 பாகங்களைக் கொண்டது. இந்தப்படத்தை முதலில் எம்ஜிஆர் எடுக்க எண்ணினார். அதில் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு நடிக்க எண்ணினார். ஆனால் அதன்பிறகு அவருக்கு நடந்த விபத்தை அடுத்து படம் எடுப்பது தள்ளிப்போனது.

அதன் பிறகு நடிகர் கமல் ஹாசன் எடுக்க எண்ணினார். அதன்பிறகு 2 தடவை மணிரத்னம் எடுக்க முயற்சித்தார். 3வது தடலை உயிரைப் பணயம் வைத்து எடுத்தார். 2 பாகங்களையும் பிரம்மாண்டமாக 150 நாளில் எடுத்து அசத்தியுள்ளார். இந்த நிகழ்வு குறித்து நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் ராஜமௌலியிடம் ஒரு தடவை சொல்லும்போது அரண்டு போனாராம்.

Advertising
Advertising

PS1 Kamal

நானே பல வருடங்களாக பாகுபலி படத்தை 2 பாகங்களாக வெவ்வேறு காலகட்டங்களில் எடுத்தேன். நீங்கள் எப்படி 150 நாளில் எடுக்க முடிந்தது. அபாரம் தான் என்று புகழ்ந்துள்ளார்.

சோழ குல வரலாறு 9வது நூற்றாண்டு காலகட்டத்தில் சிற்றரசுகளாக இருந்து சோழ சாம்ராஜ்யம் பேரரசாக உருவெடுக்குது. இதன் முதல் மன்னராக விஜயாலயச் சோழன் பதவி ஏற்கிறார். தொடர்ந்து அவரது மகன் ஆதித்ய சோழனும், அவரது மகன் பராந்தகச் சோழனும் பதவி ஏற்கின்றனர்.

பராந்தகச் சோழனுக்கு 4 மகன்கள். ராஜாதித்தர், கண்டராதித்யா, அறிஞ்சய சோழன், உத்தம சிலி. இதுல ராஜாதித்தரும், உத்தமசிலியும் அந்தக்காலக்கட்டத்துல நடந்த போரில் இறந்துவிடுகின்றனர். அடுத்தது இருவர். மூத்தவர் கண்டராதித்யர். இளையவர் அருஞ்செய சோழன்.

Ponniyin selvan 2

கண்ராதித்யர் தீவிர சிவபக்தர். நாட்டை ஆளனும்கற ஆசை அவருக்கிட்ட சுத்தமா இல்ல. இருந்தாலும் 2 சகோதரர்களோட தொடர் மரணம் அப்புறம் நாட்டு மக்களோட வற்புறுத்தலின் பேரில் வேற வழியே இல்லாம மன்னராகுறார்.

அந்தக்கால கட்டத்துல இவருக்கு திருமணம் நடக்குது. ஆனா குழந்தை இல்லை. ரொம்ப காலகட்டத்துக்கு அப்புறம் தான் அவருக்கு குழந்தை பிறக்குது. அவரு தான் மதுராந்தகன். உத்தம சோழன். இவர் பிறந்த பிறகு கண்டராதித்தன் இறந்துடறாரு.

அவருக்குப் பிறகு அவரது மகன் உத்தம சோழன் அவரு தான் மன்னராகணும். ஆனா அவரு சின்ன குழந்தை. அதனால அவரோட தம்பி அரிஞ்சய சோழன் மன்னராகுறாரு. ஆனா அவரும் உடனே இறந்துடறாரு.

இன்னும் உத்தம சோழன் குழந்தையாகத் தான் இருக்காரு. அதனால அரிஞ்சய சோழனோட மகன் சுந்தர சோழன் மன்னராகுறாரு. இப்போது சுந்தர சோழன். இவருக்கு 3 பிள்ளைகள். ஆதித்ய கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன் (ராஜராஜசோழன்).

PS1

இப்போது சுந்தரசோழனுக்குப் பிறகு உத்தம சோழன்தான் பதவி ஏற்கணும். அதாவது அவரோட பெரியப்பாவான கண்டராதித்யனோட மகன். இருந்தாலும் அந்தக்காலக்கட்டத்துல நடந்த போரில் பாண்டிய மன்னன் வீரபாண்டியன் தலையை ஆதித்ய கரிகாலன் கொய்ததால இவருக்கு இளவரசர் பட்டம் தரப்பட்டது.

அப்போ சுந்தர சோழனுக்கு அப்புறம் ஆதித்ய கரிகாலன் தான் மன்னராகணும். ஆனா அவரு மன்னராகல. அப்போ யாரு மன்னராகுறது? இந்தக் கேள்விக்கான விடை தான் பொன்னியின் செல்வன். இனி நீங்க படத்தைப் போயி பார்த்தீங்கன்னா உங்களுக்கு நல்லா புரியும்.

பிரம்மாண்டமாக எடுத்து இருக்குற இந்தப்படத்துல ஏஆர்.ரகுமானின் இசை கூடுதல் பிளஸ் பாயிண்டாக உள்ளது என்பது விமர்சகர்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக உள்ளது. இன்று வெளியான இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் பார்க்கப்போனால் வந்தியத் தேவனாக வரும் கார்த்தி தான் ஹீரோ போல தோன்றுகிறார். அனைவருக்கும் எல்லா உதவிகளும் செய்கிறார்.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படம் இதுதான் என்றால் மிகையில்லை.

Published by
sankaran v

Recent Posts