விபரீதத்தில் முடிந்த ‘பொன்னியின் செல்வன்’ பார்ட்டி!..தகாத முறையில் நடந்த செயலால் சலசலப்பு!..
சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வசூலிலும் பெரும் சாதனை பெற்றது. தமிழ் சினிமாவில் இருந்து இப்படி ஒரு வெற்றியை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.
அந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் இரண்டு தினங்களுக்கு முன் சக்சஸ் பார்ட்டி ஒன்றை மணிரத்னமும் லைக்கா நிறுவனமும் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காகவே லண்டனில் இருந்து லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் சென்னைக்கு வந்திருந்தார்.
இதையும் படிங்க : “இவரை எல்லாம் ஏன் நடிக்க வைக்குறீங்க?”… சரத்குமாரை கண்டபடி திட்டிய சூப்பர் ஸ்டார் நடிகை…
பார்ட்டியில் நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்றோர் கலந்து கொண்டனர். மேலும் விழாவிற்கு நடிகர் ரஜினியும் வந்திருந்தார் என்பது கூடுதல் சிறப்பம்சம். இப்படி பார்ட்டி ஒரு வகையில் மகிழ்ச்சிகரமாக போக இடையிலேயே சில சலசலப்பும் ஏற்பட்டதாம்.
லைக்கா நிறுவன ஊழியர் ஒருவர் குடி போதையில் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த ஒரு பெண்மணியிடம் தகாத முறையில் நடந்திருக்கிறாராம். இதனால் கடுப்பான அந்த பெண்மணி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதன் பின் அங்கு இருந்தவர்கள் இவர்களிடம் சமரசம் பேசி தடுத்திருக்கின்றனர். இப்படி பெரிய வெற்றிவிழாவை கொண்டாடிய நமது மக்கள் கூடவே கசப்பான அனுபவத்தையும் பெற்றிருக்கின்றனர்.