கிணத்துல போட்ட கல்லாக ps 2!.. ஃபுல் ஸ்கோர் அடிச்சது இவங்க மட்டும்தான்!.. பத்திரிக்கையாளர் பரபரப்பு பேட்டி..
தமிழின் பாரம்பரிய இலக்கிய நாவலாக பேசப்பட்டது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல். இந்த நாவலை படமாக்க எத்தனையோ பேர் முயற்சி செய்தும் கடைசியில் அதை மணிரத்னம் வெற்றிகரமாக செய்து முடித்தார். ஏற்கெனவே முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு படத்தை பற்றிய விமர்சனத்தை முன்வைத்தார். அதாவது முதல் பாகம் எந்த அளவு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியதோ அது மாதிரி இல்லாமல் இரண்டாம் பாகம் கிணத்துல போட்ட கல்லாக கிடைக்கின்றது என்று கூறினார்.
அதுமட்டுமில்லாமல் முதல் பாகம் ஏன் அந்த அளவு பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் கல்கியின் நாவலை படமாக்க எம்ஜிஆரிலிருந்து கமல் வரை அனைவரும் எடுக்க முயற்சி செய்தும் பலனில்லாமல் கடைசியில் மணிரத்னம் தான் எடுக்க முடிந்தது. அதனால் அந்த நாவலில் அப்படி என்னதான் இருக்கிறது ? எப்படி எடுத்திருக்கிறார்கள்?
என்பதை காண்பதற்காகவே முதல் பாகம் பற்றிய சுவராஸ்யம் மக்களிடையே இருந்திருக்கலாம் என்று கூறினார்.
மேலும் முதல் பாகத்தில் சில முடிச்சுகள் எல்லாம் மணிரத்னம் வைத்திருந்தார். அதை இரண்டாம் பாகத்தில் அவிழ்த்திருக்கிறார். மேலும் முதல் பாகத்தில் முழு ப்ளே பாயாக வலம் வந்திருப்பார் கார்த்தி. ஆனால் இரண்டாம் பாகத்தில் அவரை அந்தளவு பார்க்க முடிவதில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் இரண்டாம் பாகத்தில் முழு ஸ்கோர் அடிச்சதே ஐஸ்வர்யா ராய் தான், ஏனெனில் அவரின் வில்லத்தனம் மற்றும் காதல்
கலந்த பார்வையே படமுழுக்க நகர்த்தி கொண்டு சென்றிருக்கிறார் என்றும் கூறினார்.
மேலும் மணிரத்னம் மாதிரியே வெற்றிமாறனும் இப்பொழுது சிறுகதை , நாவலை படமாக எடுக்க முயற்சி எடுக்கும் இயக்குனர்தான். ஆனால் வெற்றிமாறன் அப்படியே எடுக்காமல் சினிமாவிற்கு தேவையான சிலவற்றையும் கூடுதலாக சேர்த்து படமாக தருகிறார். அதனால் தான் ரசிகர்கள் அவரை கொண்டாடுகின்றனர். ஆனால் மணிரத்னம் இந்த படத்தில் அப்படியே படமாக்கியிருக்கிறார்.
ஒரு வேளை உலகமே போற்றக்கூடிய நாவலில் கூடுதலாக எதாவது சேர்த்தால் எதாவது பிரச்சினை வருமோ என்று பயந்திருக்கலாம். அதற்காக அப்படியே படமாக்கியிருப்பது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது, அதனாலேயே இந்த இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்று செய்யாறு பாலு கூறினார்.
இதையும் படிங்க :கமலுக்கு விக்ரமுக்கும் இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கா?.. நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த சீயான்..