‘பொன்னியின் செல்வன்’படத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா? தவறை சுட்டிக் காட்டிய பொன்வண்ணன்

Ponniyin Selvan Movie: கல்கியின் பிரபலமான நாவல்களில் ஒன்று பொன்னியின் செல்வன் நாவல். இந்த நாவலை படிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு நம் மனதை அந்த நாவலுடனேயே இழுத்துக் கொண்டு போகும் அளவுக்கு இலக்கிய நயத்தை கையாண்டிருப்பார் கல்கி.

இந்த நாவலை படமாக்க எத்தனையோ பிரபலங்கள் முயற்சி செய்தனர். கடந்த நூறாண்டுகளாக இதை திரைப்படமாக்கும் முயற்சியில் அனைவரும் தோல்வியையே கண்டனர். ஆனால் மணிரத்தினம் அதை நிகழ்த்தி காட்டி பெரும் சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: அரைச்ச மாவை அரைச்சாலும்!.. அதுக்கும் வேணும் தனித்திறமை!.. சிவகார்த்திகேயனின் அயலான் விமர்சனம் இதோ!

இரண்டு பாகங்களாக படத்தை எடுத்துவெளியிட்டு ரசிகர்களிடமும் அன்பையும் பாராட்டையும் பெற்றார். படத்தை பார்த்த பல அறிஞர்கள் பல விமர்சனங்களை முன் வைத்தாலும் இதை படமாக்க வேண்டும் என்று முயற்சித்த மணிரத்தினத்தின் அந்த கடின உழைப்பை அனைவரும் பாராட்டினார்கள்.

ஏராளமான அறிஞர்கள் , புத்தக வாசிப்பாளர்கள் என பல பேர் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்த சில குறைகளை கூறி வந்த நிலையில் இன்று பொன்வண்ணனும் தன் கருத்தை தெரிவித்திருக்கிறார். சென்னையில் நடைபெறும் பிரம்மாண்டமான புத்தக்காட்சிக்கு வந்திருந்த பொன்வண்ணன் பல பேர் முன்னிலையில் உரையாடினார்.

இதையும் படிங்க: இவ்வளவு நாள் சும்மா இருந்தது இதற்குத்தானா? தினேஷ் வாழ்க்கையில் விளையாடிய ரட்சிதா

புத்தகத்தை பற்றியும் புத்தகம் வாசிப்பதை பற்றியும் எடுத்துக் கூறிய பொன்வண்ணன் பொன்னியின் செல்வன் படத்தை பற்றியும் கூறினார். அதாவது அந்த நாவலை எழுதுவதற்கு முன் கல்கி பல ஊர்கள், கிராமங்கள் என பல்வேறு சமவெளிப்பகுதிகளெல்லாம் சென்று அந்த இடத்தை பற்றி ஆராய்ந்தாராம்.

தன் நாவலில் கற்பனையாக சொல்லப்படும் இடங்களை கூட வரலாற்று ரீதியாக காட்ட வேண்டும் என கல்கி போகாத இடங்களே இல்லை. ஆனால் படத்தில் காட்டியது அப்படியில்லை.அதுமட்டுமில்லாமல் உடுத்திய உடைகளில் இருந்து அணிந்த நகைகள் வரை எல்லாமே வட நாட்டு ஸ்டைலில்தான் இருந்தது என பொன்வண்ணன் அவருடைய சில விமர்சனங்களை கூறினார்.

இதையும் படிங்க: அயலான் படத்தினை விஜயகாந்த் ரசிகர்கள் மிஸ் பண்ணவே கூடாதாம்!… என்ன நடந்துச்சு தெரியுமா?

 

Related Articles

Next Story