
Cinema News
தொடர் தோல்வி… மார்க்கெட் குறையல…. குவியும் வாய்ப்புகளால் மகிழ்ச்சியில் பூஜா…!
திரையுலகை பொருத்தவரை ஒரு நடிகையின் படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வந்தால், உடனே அந்த நடிகையின் ராசியால் தான் படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன என மொத்த பழியையும் தூக்கி அந்த நடிகையின் தலையில் போட்டு விடுவார்கள்.
தற்போது அப்படி ஒரு சிக்கலில் தான் நடிகை பூஜா ஹெக்டே உள்ளார். முன்னதாக தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா ஆகிய மூன்று படங்களும் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால், பூஜாவை ராசியில்லாத நடிகை என்றெல்லாம் கூறினார்கள்.
ஆனால் இந்த தொடர் தோல்வியால் என் திரைப்பயணம் எந்த விதத்திலும் பாதிக்காது என்று பூஜா மிகவும் கெத்தாக உலாத்தி வருகிறார். ஆமாங்க அவர் இந்த தோல்வி பற்றியெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவே இல்லை. அதுமட்டும் இல்லாம அவரோட மார்க்கெட் இன்னமும் அப்படியே தான் உள்ளது.
அட உண்மைதாங்க பூஜா கைவசம் இப்போ நிறைய படங்கள் இருக்கு. அதன்படி தற்போது பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கும் படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாகவும், த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாகவும், ஹரி சங்கர் இயக்கத்தில் நடிகர் பவன் கல்யாணுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.
இதுமட்டும் இல்லைங்க இப்போ சமீபத்துல பாலிவுட் நடிகர் சல்மான் கான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பூஜா ஹெக்டேவுக்கு கிடைச்சிருக்காம். அதன்படி தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக் தான் இந்த படம் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 12ம் தேதி தொடங்க உள்ளதாம்.