மைண்ட் புளோயிங்!...சைடு போஸில் சாச்சிப்புட்டியே!...வசியம் செய்த பூஜா ஹெக்டே...
மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ படத்தில் நடித்தவர் பூஜா ஹேக்டே. அப்படம் வெற்றியடையாமல் போகவே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரை மேலும் பிரபலப்படுத்தியுள்ளது.
எனவே, தெலுங்கின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கியுள்ளார். பாகுபலி புகழ் பிரபாஸுடன் அவர் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
மேலும், விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே செம ஆட்டம் போட்டுள்ளார்.
இந்த பாடல் உலக அளவில் பிரபலமடைந்து விட பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். ஒருபக்கம் படு கிளாமரான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கதற வைத்து வருகிறார்.
இந்நிலையில், சேலை மற்றும் கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.