எத்தனை பேர் வந்தாலும் உனக்கு பின்னாடிதான்!... அல்டிமேட் அழகில் பூஜா ஹெக்டே....
தென்னிந்திய திரையுலகில் ஸ்லிம் பியூட்டியாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. கன்னட, தெலுங்கு படங்களில் தன் சினிமா வாழ்க்கையை துவங்கியவர். தமிழில் ஜீவா நடித்த முகமுடி படத்தில் மட்டும் நடித்திருந்தார். அதன்பின் பல வருடங்கள் கழித்து விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
பீஸ்ட் திரைப்படம் பூஜா ஹெக்டேவுக்கு பல தமிழ் பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இவர் மாறியுள்ளார். மகேஷ்பாபு, ராம் சரண், பிரபாஸ், அல்லு அர்ஜூன் ஆகியோருக்கெல்லாம் ஜோடியாக நடித்து வருகிறார். பிரபாஸுடன் இவர் இணைந்து நடித்த ராதே ஷ்யாம் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
ஒருபக்கம் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், மறுபக்கம் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.