உன்ன பாத்தாலே பொழப்பு ஓடாது!.. ஜாக்கெட் பாவாடையில் கிறங்க வைக்கும் பூஜா ஹெக்டே..
Pooja hedge: மும்பையில் வளர்ந்தாலும் பூஜாவின் சொந்த மாநிலம் கர்நாடகா. மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டு பல அழகிப்போட்டிகளிலும் கலந்துகொண்டார். அப்படி சினிமாவில் நடிக்கும் ஆசை வர பாலிவுட்டில் வாய்ப்பு தேடினார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அப்போதுதான் மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. எனவே, சென்னையை விட்டுவிட்டு ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தேடினார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஒருகட்டத்தில் பிரபாஸ், மகேஷ் பாபு என பலருடனும் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாகவும் மாறினார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்த படத்தில் அரபிக்குத்து பாடலில் இடுப்பை வளைத்து வளைத்து நடனமாடு கோலிவுட் ரசிகர்களை வளைத்தார்.
இப்போது ஹிந்தி பட உலகில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். சல்மான்கானுடன் ஒரு படத்திலும் நடித்தார். பூஜா ஹெக்டேவின் போட்டியாளராக பார்க்கப்படும் ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் 3 படங்களில் நடித்துவிட்டார். அதுவும் அனிமல் படம் மூலம் ஹிந்தி ரசிகர்களிடமும் பிரபலமாகியிருக்கிறார்.
எனவே, நாமும் அதுபோல மாற வேண்டும் என பூஜா ஹெக்டே உறுதியாக இருக்கிறார். அதற்காக கவர்ச்சி உடைகளை அணிந்து வேறவெவலில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.. இந்நிலையில், பாவாடை சட்டை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறார்.