பீஸ்ட் செம மாஸ்!.. விஜய் வேற லெவல்!... பூஜா ஹெக்டே வெளியிட்ட வீடியோ....
மாஸ்டர் படத்திற்குன் டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
மேலும், மலையாள நடிகை அபர்ணா தாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதோடு, டாக்டர் படத்தில் நடித்த ரெட்டின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி உள்ளிட்ட சிலரும் இப்பத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.
இப்படத்தின் 100வது நாள் படப்பிடிப்பு நடைபெற்றபோது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இப்படத்தில் நடித்துள்ள அபர்ணா தாஸ் மற்றும் ரெட்டிங் கிங்க்ஸி ஆகியோர் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தனர். அப் புகைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, ரெட்டிங் கிங்ஸ்லி, அபர்ணாதாஸ், இயக்குனர் நெல்சன்,சுனில் ரெட்டி உள்ளிட்ட பலரும் இடம் பெற்றிருந்தனர். அந்த புகைப்படம் விஜய் ரசிகர்களிடையே வைரலனாது.
இந்நிலையில், இப்படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு முடிந்து விட்டது. இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள பூஜா ஹெக்டே ‘பீஸ்ட் படத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. படப்பிடிப்பில் இருந்தது போல் இல்லாமல் சுற்றுலா சென்றது போல் இருந்தது.
நெல்சனின் நகைச்சுவை உணர்வும், விஜய் சாரின் நடிப்பும் கண்டிப்பாpooja hedge releasing video about beastக உங்களை சிரிக்க வைக்கும். நெல்சன் மற்றும் விஜய் ஆகியோரின் ஸ்டைல் இப்படத்தை சிறந்த பொழுதுபோக்கு படமாக மாற்றியுள்ளது. இன்று எனது காட்சி முடிவடையவுள்ளது. இதோடு, இப்படத்திற்கான என் படப்பிடிப்பு முடியவுள்ளது சோகமாக உள்ளது. விரைவில் உங்களை திரையரங்கில் பார்க்கிறேன்’ என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.