Pooja hedge: கர்நாடகாவை சேர்ந்த பூஜா ஹெக்டே பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான். டீன் ஏஜ் ஆனபோதே மாடலிங் துறையில் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. பல அழகிப்போட்டிகளிலும் அவர் கலந்து கொண்டார். அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசையும் ஏற்பட்டது.
பாலிவுட்டில் வாய்ப்பு தேடியவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே, கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் வாய்ப்பு தேடினார். அப்போது இயக்குனர் மிஷ்கின் தான் இயக்கவிருந்த முகமுடி படத்தில் ஒரு புதுமுகத்தை தேடிவந்தார். பூஜா ஹெக்டே கண்ணில் படவே அவரை நடிக்க வைத்தார்.
ஜீவா ஹீரோவாக நடித்த அந்த படம் பாக்ஸ் ஆபிசில் ஊத்திக்கொண்டது. எனவே, தமிழுக்கு பாய் பாய் சொல்லிவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் போனார். அங்கு சில படங்களில் நடித்தார். இதுதான் நமக்கான இடம் என கணித்த பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தினார்.
ஒருகட்டத்தில் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் மாறி மகேஷ் பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜூன் போன்ற முன்னணி இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். பல வருடங்களுக்கு பிறகு தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இப்போது ஹிந்தி பட உலகில் நுழைய முயற்சி செய்து வருகிறார்.
ஒருவழியாக சல்மான் கானுடன் ஒரு படத்தில் நடித்தார். மேலும், வாய்ப்புகளை பெறுவதற்காக ஸ்லிம் உடம்பை விதவிதமாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கருப்பு வெள்ளையில் கிளுகிளுப்பு காட்டி பூஜா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஜொள்ளு ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அமைந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில்…
நடிகர் ரஜினிகாந்தின்…
புஷ்பா 2…
உதவி இயக்குனராகத்…
மகாராஜா திரைப்படம்…