புதுசா புதுசா காட்டுறியே பூஜா ஹெக்டே!.. ஜூம் பண்ணி பண்ணி ரசிக்கும் நெட்டிசன்ஸ்!..

Pooja hedge: சொந்த மாநிலம் பெங்களூர் என்றாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர்தான் பூஜா ஹெக்டே. மாடலிங் துறையிலும், சினிமாவில் நடிப்பதிலும் ஆர்வமுடையவர். முதலில் இவர் நுழைந்தது மாடலிங் துறையில்தான். சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார்.
அதன்பின் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தேட பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதுதான் மிஷ்கின் தான் இயக்கிய முகமூடி படத்திற்கு ஒரு புதிய முகத்தை தேடிவந்தார். அப்போது பூஜா ஹெக்டே அவரின் கண்ணில் பட அவரை நாயகி ஆக்கினார். இந்த படத்தில் பூஜாவுக்கு பெரிய வசனங்கள் இல்லை.
சில காட்சிகள் மட்டுமே இருந்தது. அதோடு, படமும் தோல்வி அடைந்தது. எனவே, தமிழில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன்பின்னர்தான் தெலுங்கு சினிமா பக்கம் போனார். அங்கு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் கிடைத்து ஒருகட்டத்தில் முன்னணி கதாநாயகியாகவும் மாறினார்.
விஜய் நடித்த பீஸ்ட படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் ரசிகர்களை கவரவில்லை. தெலுங்கில் மகேஷ் பாபு, ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜூன், பிரபாஸ் என முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்தார். இப்போது பாலிவுட்டிலும் நடிக்க முயற்சி எடுத்து வருகிறார்.
சல்மான்கானுடன் ஒரு படத்தில் நடித்தார். அதன்பின் தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். இதற்காக கவர்ச்சி உடைகளில் ஸ்லிம் உடம்பை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், சிவப்பு நிற கிளாமர் உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.