உடம்போடு ஓட்டிய டிரெஸ் உசுர வாங்குது!. பூஜா ஹெக்டேவின் கிளாமரில் ஆடிப்போன ரசிகர்கள்…
மும்பையை சேர்ந்தவர் பூஜா ஹெக்டே. பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே அங்குதான். இவரின் பெற்றோர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். கல்லூரியில் படிக்குபோதே நடனம் மற்றும் ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டார்.
2009ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா மற்றும் 2010ம் ஆண்டு நடந்த மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டிகளில் கலந்து கொண்டார். இயக்குனர் மிஷ்கின்தான் இவரை தான் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் செய்து வைத்தார்.
ஜீவா ஹீரோவாக நடித்த அந்த திரைப்படம் வெற்றிபெறவில்லை. எனவே, ஆந்திராவுக்கு சென்று தெலுங்கு படங்களில் நடித்தார். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களிலேயே நடித்து முன்னணி நடிகையாகவும் மாறினார்.
தெலுங்கு சினிமாவில் 10 வருடங்களாக நடித்துதான் தற்போதைய நிலைக்கு வந்துள்ளார். விஜயுடன் பீஸ்ட் படத்திலும் நடித்திருந்தார். தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
அஜித் நடிப்பில் ஹிட் அடித்த வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் ஹிட் அடித்தால் தொடர்ந்து ஹிந்தியில் நடிக்க பூஜா ஹெக்டே முடிவு செய்துள்ளார்.
ஒருபக்கம், ஸ்லிம் உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படன்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், உடம்போடு ஒட்டிய உடையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.