ஸ்லிம் உடம்பு சும்மா சிக்குன்னு இருக்கு!. ஓவர்டோஸ் அழகில் சொக்க வைக்கும் பூஜா ஹெக்டே..

0
403
pooja
pooja

சொந்த மாநிலம் கர்நாடகா என்றாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் பூஜா ஹெக்டே. மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்படவே முயற்சிகள் செய்தார். முதலில் பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டு மாடலிங் துறையில் பிரபலமானார். அதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்பு வரும் என நம்பினார்.

pooja

அவர் நினைத்த படியே நடந்தது. மிஷ்கின் இயக்கிய முகமுடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படத்தில் கதாநாயகிக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. அதோடு, படமும் பாக்ஸ் ஆபிஸில் தேறவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்று வாய்ப்பு தேடினார்.

pooja

டோலிவுட்டில் மெல்ல மெல்ல வாய்ப்புகளை பெற்று நடிக்க துவங்கினார். கோலிவுட் கை கொடுக்காத நிலையில், டோலிவுட் அவரை வாழ வைத்தது. பல திரைப்படங்களிலும் நடித்து அங்கு தனக்கென இடத்தை பிடித்து தெலுங்கில் பிரபாஸ், மகேஷ் பாபு உள்ளிட்ட இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

pooja

விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக வந்தார். இப்போது ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியுள்ள பூஜா ஹெக்டே சல்மான்கானுடன் ஜோடி போட்டு ஒரு படத்தில் நடித்தார். அடுத்து சில வாய்ப்புகள் அவருக்கு வந்துள்ளது.

pooja

ஒருபக்கம், கவர்ச்சி டிரெஸ் அணிந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் பூஜா ஹெக்டே ஸ்லிம் உடம்பை நச்சின்னு காட்டி புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

pooja

google news