பீஸ்ட் நாயகியை விரட்டி விரட்டி செல்பி எடுத்த ரசிகர்... கடுப்பான பூஜா
நாயகிகள் மீது ரசிகர்களுக்கு இருக்கும் கிரஷ் ஒருபோதும் குறையாது. தங்களுக்கு பிடித்த நாயகியை எப்போதாவது நேரில் பார்த்துவிட மாட்டோமா என ஏங்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர். அப்படி உள்ள நிலையில் தங்களின் பேவரைட் நாயகியை பார்த்து விட்டால் சும்மா இருப்பார்களா என்ன?
அப்படி ஒரு ரசிகரிடம் தான் சமீபத்தில் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே சிக்கியுள்ளார். முகமூடி படத்திற்கு பின்னர் ஒரு மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருப்பவர் தான் நாயகி பூஜா ஹெக்டே. அதுவும் மாஸ் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா நடித்துள்ளார்.
இதுதவிர சமீபத்தில் பாகுபலி பட பிரபலம் பிரபாஸ் உடன் பூஜா இணைந்து நடித்த ராதே ஷ்யாம் படம் வெளியானது. மேலும் சில புதிய படங்களில் பூஜா ஒப்பந்தமாகி அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து விட்டு வெளியே வந்த பூஜாவை ரசிகர் ஒருவர் மடக்கியுள்ளார்.
அந்த ரசிகர் பூஜாவிடம் செல்பி எடுக்க வேண்டும் என கேட்க அதற்கு பூஜாவும் ஓகே சொல்லி போஸ் கொடுத்திருந்தார். ஆனால் செல்பி எடுத்த பின்பும் அந்த நபர் விடாமல் பூஜாவிடம் மீண்டும் செல்பி எடுக்க வேண்டும் என்று கேட்டு தொல்லை செய்ததால் கடுப்பான பூஜா முகம் சுளிக்கும் அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீஸ்ட் படத்தில் பூஜா ஒப்பந்தமானதில் இருந்து தற்போது வரை அவர் தான் டிரெண்டிங்கில் உள்ளார். அதிலும் அரபிக்குத்து பாடலில் இவரின் ஆட்டத்தை கண்ட பலரது ரீசன்ட் கிரஷ் லிஸ்ட்டில் பூஜா தான் டாப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.