பீலா வுடாத.... நீங்க யாருனு உலகத்துக்கே தெரியும்....! அக்கட தேசத்தில் தற்பெருமை பேசிய பூஜா ஹெக்டே....
தமிழ் சினிமாவில் முதன் முதலில் முகமூடி திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வரும் பூஜா ஹெக்டே தென்னிந்திய நடிகைகளில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமே அந்த அளவுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை.
ஹிந்தி சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த இவர் மீண்டும் விஜய் நடித்த பீஸ்ட் படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காலடி வைத்தார். ஆனால் படமோ ஏகப்பட்ட எதிர்மறையான விமர்சனங்களோடு தோல்வியை சந்தித்தது. அதன்பின் தெலுங்கில் பிரபாஸுடன் ராதேஷ்யம் படத்தில் நடித்தார்.
அந்த படமோ மோசமான விமர்சனங்களோடு படுதோல்வியடைந்தது. அதை தொடர்ந்து ராம்சரண் நடித்த ஆச்சர்யா படத்தில் நடித்தார். அந்த படம் அண்மையில் வெளியாகி அதுவும் கமெர்சியலாக தோல்வியை சந்தித்தது. இப்படி தொடர்ந்து 3 படங்களுமே ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த பூஜா ஹெக்டேவிற்கு ராசியில்லாத நடிகை என்று கூட அரசல் புரசலாக பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் பூஜா ஹெக்டே பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றிருக்கிறார். அங்கு அவரிடம் பத்திரிக்கையாளர்கள் பீஸ்ட் படத்தின் தோல்வியை பற்றி கேட்டனர். அதற்கு அவர் பீஸ்ட் படம் தோல்வியை சந்தித்தாலும் அந்த படத்தின் அரபிக் குத்து பாடல் செம ஹிட் ஆனதை யாராலும் மறக்க முடியாது. மேலும் தொடர்ந்து 6 ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்த பெருமை எனக்கு இருக்கு என்று பத்திரிக்கையாளரிடம் கூறியுள்ளார்.