அசிங்கப்படுத்திய பூஜா ஹெக்டே.... பெருந்தன்மை காட்டிய சமந்தா....

by ராம் சுதன் |   ( Updated:2022-02-21 10:05:02  )
pooja hegde-samantha
X

தமிழ் சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடல் தான் சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கில் உள்ளது.

இந்த பாட்டுக்கு பல பிரபலங்களும் ரீல்ஸ் செய்து வீடியோக்கள் வெளியிட்டு இருந்தனர். அந்த வரிசையில் பிரபல நடிகை சமந்தாவும் அரபிக்குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார். பலரும் இந்த வீடியோவுக்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள். நடிகையும் பூஜாவும் சமந்தாவின் இந்த வீடியோவிற்கு Amazee என கமெண்ட் செய்திருந்தார்.

samantha

ஆனால் முன்னதாக நடிகை பூஜா ஹெக்டே கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் நடிகை சமந்தா குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருந்தார். அதில் "எனக்கு ஒன்றும் இவர் எந்த விதத்திலும் அழகாக தெரியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். இது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின்னர் பூஜா ஹெக்டே, தனது சமூக வலைதளபக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டது. அதனால் அதில் வரும் பதிவுகளை கண்டு கொள்ளாதீர்கள் என இந்த விவகாரத்திற்கு விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். இருப்பினும் சமந்தா ரசிகர்கள் பூஜா மீது மிகுந்த கோபத்தில் இருந்தனர்.

samantha

samantha

இந்த நிலையில் தான் தற்போது சமந்தா மற்றும் பூஜா இடையே இருக்கும் மனக்கசப்பிற்கு முடிவு கட்டும் விதமாக பூஜா சமந்தாவை பாராட்டி அவரின் வீடியோவிற்கு கமெண்ட் அளித்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே உள்ள சண்டை முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தன்னை விமர்சித்தாலும் அவரது பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்ட சமந்தாவின் பெருந்தன்மையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதுதவிர சமந்தாவின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் பூஜா ஹெக்டேவிற்கு பதில் சமந்தாவையே ஹீரோயினாக போட்டிருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

Next Story