பிகினியில் தெறிக்கவிட்ட பீஸ்ட் நடிகை... ஒரு பாதியா இருந்தாலும் சும்மா அப்படி கீது!

pooja hegee
நடிகை பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். ஆனால், முதல் படம் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை. 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.
இவர் இந்தியில் ஸ்டார் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொஹஞ்சதாரோ திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் அட்டர் பிளாப் ஆனது. அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் நடித்து தொடர் ஹிட் அடித்தார்.

pooja hegde
தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக தெலுங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ளார். முகமூடி படத்திற்கு பின்னர் சூப்பர் ஹிட் நாயகியாக தமிழில் மீண்டும் ஹிட் ஹீரோயினாக வலம் வரப்போகும் பூஜா ஹெக்டேவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.