கேன்ஸ் விழாவில் திருடுபோன சூட்கேஸ்... மாற்ற உடையின்றி தவித்த விஜய் பட நடிகை....!
பிரான்ஸ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு இந்தியாவை சேர்ந்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் நடிகைகள் பூஜா ஹெக்டே, தமன்னா, ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் மாதவன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
இந்நிலையில் விழாவில் பங்கேற்ற நடிகை பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் திருடு போனதாக கூறப்படுகிறது. அந்த சூட்கேஸில் பூஜா ஹெக்டேவின் விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த மேக்கப் பொருட்கள் இருந்த நிலையில், மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தான் கொண்டு வந்த அத்தனை ஆடைகளும் சூட்கேஸில் இருந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற பூஜா ஹெக்டே மாற்று உடை கூட இல்லாமல் இருந்துள்ளாராம். இதனால் பூஜா மட்டுமின்றி அவரது ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கெட்டதிலும் ஒரு நல்லதாக நடிகை பூஜா ஹெக்டே தங்க மற்றும் வைர நகைகளை சூட்கேஸில் வைக்காமல் கழுத்தில் அணிந்திருந்ததால், நகைகள் திருடு போகாமல் தப்பித்ததாம். பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க வந்த நடிகையின் பொருட்கள் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.