பெரிய பட்ஜெட் பெரிய ஹீரோக்கள் படங்களில் நடித்தும் ஹாட்ரிக் தோல்வி... சோகத்தில் நடிகை. ..!
கோலிவுட்டில் அறிமுகமான முதல் படமே படுதோல்வி என்பதால் தெலுங்கு சினிமாவிற்கு தாவியவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. தெலுங்கு ரசிகர்கள் பூஜாவுக்கு அமோக ஆதரவு அளித்த காரணத்தால், அங்கு அவர் புட்ட பொம்மா என்ற ஒரே ஒரு பாட்டில் டாப் நடிகையாக உயர்ந்து விட்டார்.
அந்த பாடல் வெற்றியின் எதிரொலி காரணமாக அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட்டனர். அப்படி கிடைத்த வாய்ப்பு ராதே ஷ்யாம், பீஸ்ட் பட வாய்ப்புகள்.
இரண்டுமே பெரிய பட்ஜெட் மற்றும் மாஸ் ஹீரோக்களின் படங்கள் தான். ஆனால் என்ன பிரயோஜனம் இரண்டு படங்களுமே படு தோல்வியை சந்தித்தது. அதுவும் தமிழில் இத்தனை ஆண்டுக்கு பின்னர் ரீ என்ட்ரி கொடுத்த பீஸ்ட் படமும் தோல்வி அடைந்ததால் மிகுந்த வருத்தத்தில் இருந்த பூஜா ஆச்சார்யா படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் மனதை தேற்றி கொண்டார்.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஆச்சார்யா படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று தோல்வி படங்களை கொடுத்த நாயகி பூஜா ஹெக்டே உச்சக்கட்ட மனவேதனையில் உள்ளாராம்.
இவர் ஒருபுறம் வேதனையில் இருக்க மற்றொரு புறம் இனியும் இவரை தங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்யலாமா வேண்டாமா என தயாரிப்பாளர்கள் இப்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டார்களாம். இதனால் எங்கே மார்க்கெட் பறிபோய் விடுமோ என்ற பீதியில் நடிகை உள்ளாராம்.