பூஜாவுக்கு வாக்கு கொடுத்த விஜய்... அப்போ ராஷ்மிகா நிலைமை? தளபதி 66 வாய்ப்பு யாருக்கு?

by ராம் சுதன் |   ( Updated:2022-02-18 03:03:57  )
பூஜாவுக்கு வாக்கு கொடுத்த விஜய்... அப்போ ராஷ்மிகா நிலைமை? தளபதி 66 வாய்ப்பு யாருக்கு?
X

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். விஜய்யின் 66வது படமாக உருவாக உள்ள இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. பொதுவாக விஜய் படம் என்றாலே பாடல்கள் அதிகமாக இருக்கும். காரணம் விஜய் நடனத்தில் அசத்துவார் என்பதால் அவரின் நடனத்திற்கு தீனி போடும்படியாக குறைந்தபட்சம் ஆறு பாடல்களாவது இடம்பெற்றிருக்கும். ஆனால் பீஸ்ட் படத்தில் மொத்தமாகவே ஒரே ஒரு பாடல் தானாம்.

vijay-pooja hegde

vijay-pooja hegde

அதுதான் சமீபத்தில் வெளியான அரபிக்குத்து பாடல். இந்த பாடலில் ஹீரோயின் பூஜா ஹெக்டேவிற்கு அதிக ஸ்கோப் இல்லையாம். அதேபோல் படத்திலும் விஜய்க்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் பயங்கர அதிருப்தியில் இருந்த பூஜா ஹெக்டே தனக்கு ஸ்கோப் குறைவாக இருப்பதாக மிகவும் வருத்தத்துடன் பூஜா விஜய்யிடம் கூறி புலம்பி உள்ளாராம்.

இதனால் விஜய் தன்னுடைய அடுத்த படத்தில் பூஜா ஹெக்டேக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளாராம். அதன்படி வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 66 படத்தில் பூஜாவுக்கு வாய்ப்பு கொடுக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு தரப்பில் ராஷ்மிகாவை முடிவு செய்துள்ளார்களாம்.

rashmika

இதனால் யார் ஹீரோயின் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். மேலும் சிலர் தளபதி 66 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதால், இவர்கள் இருவருமே நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். எனவே இந்த படத்திலாவது பூஜா ஹெக்டே ஆசை நிறைவேறுகிறதா என்பதை பார்ப்போம்.

Next Story