ராக் ஸ்டாருடன் ரொமான்ஸ் பண்ணும் பீஸ்ட் பட நடிகை...! வலையத்தில் வைரலாகும் செய்தி...
முன்னனி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தான் இப்பொழுது எல்லோரும் விரும்பும் ஒரு நடிகையாக அதுவும் பேன் இந்தியா அளவில் தேடப்படும் நடிகையாக மாறி வருகிறார். இவர் இப்பொழுது கே.ஜி.எஃப் பட ஹீரோ யஷ் உடன் சேர்ந்து டூயட் பாட தயாராகி விட்டார்.
கே.ஜி.எஃப் - 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க யஷ் ஒப்பந்தமாகி தற்பொழுது படத்திற்கு யஷ்-19 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். 'யாஷ் 19' படத்தில் அவர் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், பூஜா ஹெக்டே விஜய் தேவரகொண்டாவுடன் ‘ஜேஜிஎம்’ படத்திலும், ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக ‘சர்க்கஸ்’ படத்திலும், சல்மான் கானுக்கு ஜோடியாக ‘கபி ஈத் கபி தீபாவளி’ படத்திலும், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ‘எஸ்எஸ்எம்பி 28’ படத்திலும் நடித்து வருகிறார்.
அம்மணி தற்பொழுது எல்லா மொழிகளிலும் படு பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படங்களான பீஸ்ட், ராதே ஷ்யாம் போன்ற படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இனிமேல் வரக் கூடிய படங்களாவது நல்ல வரவேற்பை கொடுக்கும் என காத்திருக்க வேண்டும்.