‘தளபதி 69’ இப்படித்தான் ரெடியாகுது.. முதன் முறையாக சீக்ரெட்டை உடைத்த பூஜா ஹெக்டே

pooja
Thalapathy 69: விஜய் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்தப் படத்திற்கு பிறகு விஜய் முழுவதுமாக அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். சினிமாவிற்கு முழுக்க போட்டு விட்டு ஒரு முழு நேர அரசியல் வாதியாக பயணிக்க இருக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகளைத்தான் இப்போது கவனம் செலுத்தி வருகிறார்.
முழு நேர அரசியல்வாதியாக விஜய்: மிகப்பெரிய மாநாட்டை நடத்தி தன்னுடைய படை பலத்தை காட்டிய விஜய் சமீபத்தில் கோவைக்கும் சென்று அங்குள்ள மக்களை சந்தித்தார். ரோடு ஷோ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயை பின் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் வருவதை பார்க்க முடிந்தது. வரும் 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு மாற்றத்தை கொண்டுவருமா? நிச்சயமாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில்தான் விஜய் முழுவதுமாக இறங்கி வேலை செய்து வருகிறார்.
அனல்பறிக்கும் பேச்சு: விஜய் என்றாலே யாருடனும் பேச மாட்டார், அமைதியாகத்தான் இருப்பார் என்ற ஒரு பிம்பம் இருந்தது. ஆனால் அதை முற்றிலுமாக தகர்ந்தெறிந்திருக்கிறார் விஜய். அரசியலில் தன்னுடைய எதிராளி யார் என்பதையும் கூறியதோடு அவர்களுக்கு எதிராக சரமாரியாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இவருடைய இந்த அனல்பறிக்கும் பேச்சைக் கேட்டு அனைவருமே வாயடைத்து போயிருக்கின்றனர்.
தொடர்ந்து அரசியல் வசனங்கள்: தலைவா படத்தில் இருந்தே விஜயின் படங்களில் அரசியல் வாசனை வீசத்தான் செய்தது. ஏதாவது ஒரு வகையில் மறைமுகமாக அரசியலை பேசியிருப்பார். ஆனால் இப்போது முழுவதுமாக ஒரு அரசியல் கட்சித்தலைவராக மாறிய பிறகு ஜனநாயகன் படத்தில் எப்படிப்பட்ட அரசியல் கருத்துக்கள் இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இரண்டாவது முறையாக ஜோடி: இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.பீஸ்ட் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் பூஜா ஹெக்டே விஜயின் கடைசி படத்தில் ஹீரோயினாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அதே நேரம் அவர் சினிமாவில் இருந்து விலகுவது வருத்தத்தை அளிக்கிறது. ஏனெனில் அவருடன் சேர்ந்து நிறைய படங்கள் பண்ண வேண்டும் என நினைத்திருந்தே. ஆனால் அவர் வேறு ஒரு பாதையை தேர்ந்தெடுத்து போக இருக்கிறார். அதற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்,

மேலும் ஜன நாயகன் படத்தை எச்,வினோத் மிகவும் கிராண்டாக தயார் செய்து வருகிறார். அவ்வளவுதான் சொல்ல முடியும். ஆனால் படம் பிரம்மாண்டமாக இருக்கப் போகிறது என பூஜா ஹெக்டே கூறினார். பீஸ்ட் படத்தில் விஜய் தன்னுடைய காரில் நெல்சன், பூஜா ஹெக்டே இவர்களை ஏற்றிக் கொண்டு ஒரு ரவுண்ட் கூட்டிக் கொண்டு போனார். ஆனால் அந்த மாதிரியான சம்பவம் இன்னும் இந்தப் படத்தின் போது நடக்கவில்லை என்றும் பூஜா தெரிவித்தார்.