டான்ஸ் ஆட முயன்று பல்பு வாங்கிய பாலிவுட் நடிகர்.... பங்கம் செய்த பீஸ்ட் நாயகி.... டிரோல் செய்யும் ரசிகர்கள்...!

by ராம் சுதன் |
pooja hegde
X

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கானை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து டிரோல் செய்து வருகிறார்கள். திடீரென அவரை டிரோல் செய்ய காரணம் என்ன என்று தானே யோசிக்கிறீர்கள். காரணம் இருக்கு டிரோல் செய்யும் அளவிற்கு சல்மான் கான் ஒரு சிறப்பான சம்பவத்தை செய்துள்ளார்.

அதன்படி சமீபத்தில் துபாயில் நடைபெற்ற விழா ஒன்றில் சல்மான்கான் கலந்து கொண்டிருந்தார். அப்போது சல்மான்கானும் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே ஆகிய இருவரும் சேர்ந்து மேடையில் நடனம் ஆடினார்கள். அதுவும் சல்மான் கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கிக் படத்தில் இடம்பெற்ற Jumme Ki Raat என்ற பாடலுக்கு தான் அவர்கள் நடனமாடினார்கள்.

salman khan-pooja hegde

salman khan-pooja hegde

இந்த படத்தில் சல்மான் கானுடன் இணைந்து ஜாக்குலின் பெர்னான்டஸ் நடித்திருந்தார். இப்படம் அந்த சமயத்தில் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை செய்தது. அதுமட்டும் இன்றி இப்படத்தில் இடம்பெற்ற Jumme Ki Raat என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அதற்கு காரணம் அந்த பாடலில் இடம்பெற்ற சல்மான் கானின் சிக்னேச்சர் ஸ்டெப் தான்.

எனவே அந்த சிக்னேச்சர் ஸ்டெப்பை மேடையில் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்த நினைத்த சல்மான் கான் முயற்சி செய்தார். ஆனால், அதை பூஜா ஹெக்டேவோ அவரை கண்டு கொள்ளாமல் நகர்ந்து சென்று விட்டார். சல்மான்கானும் எப்படியாவது அந்த ஸ்டெப்பை போட முயற்சி செய்தார் அதற்குள் பாடலே முடிவடைந்து விட்டது.

தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் ரசிகர்களால் டிரோல் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் பலர் சல்மான் கானை குறிப்பிட்டு, "எதுக்கு உனக்கு இந்த தேவை இல்லாத வேலை" என விமர்சித்தும் கிண்டல் செய்தும் வருகிறார்கள். ஒரு மாஸ் ஹீரோவை ஒரே ஒரு வீடியோவால் ஜோக்கராக்கி விட்டார்கள்.

Next Story