ஆசையாக வந்த பூனம் பாஜ்வா!..அந்த நடிகரை பார்த்ததும் ஆடமாட்டேனு அழுது ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம்!..
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம், கவர்ந்திழுக்கும் கட்டழகு ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தார். தெனாவட்டு, கச்சேரி ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறிய பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போகவே அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார்.
இந்த நிலையில் பூனம் பாஜ்வாவை பற்றி ஒரு செய்தி தற்போது வைரலாகி வருகின்றது. இவர் தற்போது நடிகர் ராம்கியுடன் ‘குருமூர்த்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரு சமயம் சினிமா 100 வருட விழாவை கொண்டாடியது.
இதையும் படிங்க : பிரகாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் தெரியுமா? இதுக்கு தான் இப்படி ஒரு பெயரு வச்சாராம்… அடடா!
அப்போது ஷோ டைரக்டராக இருந்தவர் இயக்குனர் செல்வமணி. அந்த விழாவில் ஒரு பாடலுக்கு நடிகை பூனம் பாஜ்வா ஒப்பந்தமாயிருந்தார். அவரிடம் சொன்னதுக்கு யார் என் கூட ஆடப் போகிறார் என்று கேட்டாராம். உடனே செல்வமணி பிரிதிவிராஜ் என்று சொன்னதும் அம்மணிக்கு மலையாள நடிகர் பிரிதிவிராஜ் என்று நினைத்து ஒரே சந்தோஷத்தில் குதித்தாராம்.
ஆட வரும் போது தமிழ் சினிமா நடிகர் பப்லு பிரிதிவிராஜ் தான் பூனம் பாஜ்வாவுடன் நடனம் ஆட வந்திருக்கிறார். இவரை பார்த்ததும் பிரிதிவிராஜ் எங்கே என கேட்டிருக்கிறார் பூனம். இவர் தான் என்று சொன்னதும் ஒரே அழுகையாம். இவருடன் சேர்ந்து ஆட மாட்டேன் என்று அடம் பிடித்து விட்டாராம். அதன் பின் சோலோ நடனம் ஆடியிருக்கிறார் நம் பெண்குட்டி பூனம்.