டிக்கெட்லாம் வேண்டாம்.. Free-யா பாருங்க...நச்சின்னு போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா..
ஹரி இயக்கிய சேவல் படம் மூலம் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்தார். ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதோடு, முத்தின கத்திரிக்கா, ரோமியோ ஜூலியட், கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வந்தார். திடீரென சினிமாவில் இருந்தே காணாமல் போனார்.
அரண்மனை 2 படத்தில் ஆண்ட்டி போல் தோற்றமளித்து அதிர்ச்சி கொடுத்தார். மேலும், ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்துராஜா படத்திலும் கிளுகிளுப்பான ஆண்ட்டியாக நடித்த்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது படு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.