பள்ளியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் பூனே பட்டத்தை பெற்றவர் பூனம் பாஜ்வா. தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். தமிழில் ஹரி இயக்கத்தில் பரத் நடித்த ‘சேவல்’ படம் மூலம் அறிமுகமானார்.

அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கொழுக் மொழுக் அழகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

தமிழில் கதாநாயகியாக நடித்து வந்த இவரின் மார்க்கெட் ஒரு கட்டத்தில் சரிந்து போக, சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார்.

மேலும், தற்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

