Categories: Cinema News latest news

ஏங்க அதுக்குனு இப்படியா போடுவீங்க… நான் சாகலைங்க.. ஷாக் கொடுத்த பூனம் பாண்டே!…

Poonam Pandey: 32 வயதில் கர்ப்பப்பை புற்றுநோயில் இறந்ததாக கூறப்படும் பூனம் பாண்டே தான் சாகலை என்ற தகவலுடன் மீண்டும் ஷாக் கொடுத்து இருக்கிறார். அவர் இன்ஸ்டாவில் அதற்கு அவர் வெளியிட்டு இருக்கும் அடடே விளக்கமும் ரசிகர்களை கடுப்பாக்கி இருக்கிறது.

நடிகை பூனம் பாண்டே பாலிவுட்டின் கவர்ச்சி நாயகியாக இருப்பவர். சினிமாவை விட அவரின் ஆப் மற்றும் இன்ஸ்டா புகைப்படம் மூலமே அவர் ரசிகர்களிடம் பிரபலமாக இருக்கிறார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வம்பு செய்து கொண்டு இருப்பார். ஏடாக்கூடமாக நிறைய படங்களை வெளியிடுவதும் அவர் வழக்கமாகவே இருக்கிறது.

Also Read

இதையும் படிங்க: நடிகை பூனம் பாண்டே திடீர் மரணம்!. இன்ஸ்டாகிராமில் வெளியான அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இருந்தும் அவர் கவர்ச்சிக்காகவே ஒரு கூட்டம் அவரை ஃபாலோ செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று அவரின் இன்ஸ்டாவில் ஒரு போஸ்ட் வெளியானது. அதில், நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் இறந்துவிட்டார். அவரை நினைவு கூற வேண்டும் என்பதால் தனிமை கொடுக்க வலியுறுத்தப்பட்டது.

முதலில் இந்த செய்தி பிராங்க் என்று தான் நினைக்கப்பட்டது. ஆனால் நேரம் செல்ல மிகப்பெரிய மீடியாக்களும் இதை உண்மை எனக் கருதி அவருக்கு அஞ்சலி செலுத்தி இருந்தனர். ஆனால் அம்மணி தன் வேலையை இதிலும் காட்டி இருக்கிறது தான் அதிர்ச்சி தகவலாக மாறி இருக்கிறது.

இதையும் படிங்க: வீக் எண்டுக்கு இது செம ட்ரீட்டு!.. ரிப்பீட் மோடில் ரசிக்க வைக்கும் ரித்திகா சிங்…

இந்த பதிவில் வந்து ரசிகர்கள் அம்மணியை கழுவி ஊற்றி வருகின்றனர். கேன்சர் நோயாளிகளை கேலிக்கு உள்ளாக்குவது போல இருக்கிறது. இந்த பப்ளிசிட்டி தேவையா? திருந்த மாட்டியா என பல வசைகளால் திட்டிக்கொண்டு இருப்பதையும் பார்க்க முடிவது குறிப்பிடத்தக்கது.

பூனம் பாண்டேயின் அடடே விளக்கம்: https://www.instagram.com/p/C24H_mDIa-c/?hl=en&img_index=1

 

Published by
Akhilan