என்னையும் நிர்வாண காட்சியில் நடிக்க அணுகினார்கள்.... பிரபல நடிகை ஓப்பன் டாக்....!
படத்திற்கு படம் மாறுபட்ட கதைகள் மூலம் தனது வித்தியாசமான அணுகுமுறைகளால் தனித்து காட்சி அளிக்கும் இயக்குனர் என்றால் அது மிஷ்கின் தான். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வரும் மிஷ்கின் தற்போது அவரது ஹிட் படமான பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
ஆண்ட்ரியா, பூர்ணா மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த நடிகை பூர்ணாவிடம் இதுகுறித்து தொகுப்பாளர் கேள்வி கேட்டார். ஆனால் பூர்ணா அதற்கு பதிலளிக்க மறுத்து விட்டார். மேலும், "படத்தில் அதுபோன்ற காட்சி இருக்கா இல்லையா? என்பது சஸ்பென்ஸ். எனக்கு உண்மை தெரியும் ஆனால் நான் கூற மாட்டேன்" என கூறி விட்டார்.
மேலும், "ஒரு பிரபல இயக்குனர் ஒருவர் ஓடிடி வெப் தொடர் ஒன்றிற்காக என்னை அணுகினார். அவர் கூறிய கதை எனக்கு பிடித்திருந்தது. ஆனால் அதில் நிர்வாண காட்சி ஒன்று இருந்தது. அந்த காட்சி கதைக்கு மிகவும் முக்கியமான காட்சி. எனவே அதை நீக்க முடியாது.
ஆனால் என்னால் அதுபோன்ற காட்சிகளில் நடிக்க முடியாது என்பதால், நான் அந்த கதையில் நடிக்க மறுத்து விட்டேன். இருப்பினும் அது ஒரு தரமான கதை" என கூறியுள்ளார். சமீபகாலமாக நடிகைகளுக்கு இதுபோன்ற காட்சிகள் வருவது குறிப்பிடத்தக்கது.